இதாலயே எங்கள அடிங்க ஐயா.. இளையராஜாவோடு கார்த்திக்கை ஒப்பிட்டு இணையவாசிகள் போஸ்ட்!
சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ் சினிமா வட்டாரத்திலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி பேசப்படும் முக்கியமான ஒன்றாக இருப்பது நடிகர் கார்த்தி குறித்த பேச்சுத்தான். அதாவது இயக்குநர் பாரதி கண்ணன் தனக்கு நடிகர் கார்த்திக்குடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து தெரிவித்தது பெரும் பேசு பொருளாக மாறியது. அதன் பின்னர் அந்த வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டதையும் பார்க்க முடிந்தது. இப்படி இருக்கும்போது, இணையவாசிகள் பலரும் நவரசநாயகன் கார்த்திக் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோரை ஒப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதாவது இயக்குநர் பாரதி கண்ணன் அளித்திருந்த ஒரு பேட்டியில், " நான் ஒரு படத்தில் நடிகர் கார்த்திக்கை கமிட் செய்திருந்தோம். படத்தின் கதையை ஏற்கனவே தயாரிப்பாளரிடம் சொல்லி நான் உறுதி செய்து விட்டேன். இப்படி இருக்கும்போது அந்த படத்தில் கார்த்திக்கை நடிக்க வைக்க முடிவு செய்து, அவருக்கு அட்வான்ஸும் கொடுத்தாகிவிட்டது. இப்படி இருக்கையில் நடிகர் கார்த்திக் கதையை கேட்டுவிட்டு, இந்த கதையை எனது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள், கதையை மாற்றலாம் என்று கூறினார்.

இதை கவனித்த இணையவாசிகள் தற்போது கார்த்திக்கை மேலும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது, " இங்க கார்த்திக் பத்தி பாரதி பேசிய வீடியோவே போட்ட எல்லா ஐடியையும் ரிப்போர்ட் அடிச்சு சேனல்லயும் தூக்க வச்சு இப்ப மன்னிப்பும் கேக்க வச்சுட்டாங்க. இப்பவே இப்படி இருக்குனா அப்போ எந்த அளவுக்கு இருந்து இருக்கும்" என்று பதிவிட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் மேலும் சில இணையவாசிகள், கார்த்திக்கையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு பதிவிட தொடங்கிவிட்டார்கள்.

அதாவது, " கார்த்திக் கிட்ட கொடுத்த காசு திரும்பி வராதுனு தெரியாதா ? Me to Peak time-ல Free ah மியூசிக் போட்டு கொடுத்த இசைஞானி : ஐயா இந்த செருப்பாலயே எங்களை அடிங்கய்யா.." என்று பதிவிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் அவர் காலடி எடுத்து வைத்த காலத்தில் இருந்து இப்போது வரை பெரிய நடிகர், சிறிய நடிகர், பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என எந்த வேறுபாடும் பார்க்காமல், அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரி இசையமைக்கும் ஒரே இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும் தான்" என்றும் பேசி வருகிறார்கள். அது உண்மையும் கூட.


Click it and Unblock the Notifications











