என்னை போய் அபிராமியுடன் ஒப்பிடுகிறார்களே?: நடிகை நிலானி கண்ணீர்

By Siva

Recommended Video

லலீத் குமாரை பற்றி நிலானி பரபரப்பு பேட்டி | Nilani Exclusive interview

சென்னை: பெற்ற பிள்ளைகளை கொலை செய்த அபிராமியுடன் தன்னை மக்கள் ஒப்பிடுவது குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நிலானி.

டிவி நடிகையான நிலானி உதவி இயக்குனர் காந்தி லலித் குமார் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லலித் குமார் தீக்குளித்ததில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவர் இறந்ததை பார்த்த மக்கள் நிலானியை தரக்குறைவாக பேசத் துவங்கினார்கள்.

தலைமறைவு

தலைமறைவு

லலித் குமார் இறந்ததை அடுத்து நிலானி தலைமறைவாகிவிட்டார், குற்றம் செய்ததால் எஸ்கேப் ஆகிவிட்டார் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த அவர் லலித் குமாரின் மரணத்திற்கு தான் காரணம் இல்லை என்று தெரிவித்தார். ஆண்மையே இல்லாத லலித் குமார் தன்னை 3 ஆண்டுகளாக கொடுமைபடுத்தி வந்ததாகவும் கூறினார்.

அபிராமி

அபிராமி

கள்ளக் காதலுக்காக பெற்ற இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமியுடன் நெட்டிசன்கள் நிலானியை ஒப்பிட்டு பேசத் துவங்கினர். இதை பார்த்த நிலானியோ, குழந்தைகளுக்காக லலித் குமாரின் கொடுமைகளை எல்லாம் 3 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்ட என்னை போய் அபிராமியுடன் ஒப்பிடுகிறார்களே. அபிராமியும், நானும் ஒன்றா என்று கேட்டு கண் கலங்கினார்.

கொடுமை

கொடுமை

லலித் குமார் பணத்திற்காக பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதை கண்டுபிடித்து அவரிடம் இருந்து விலகியுள்ளார் நிலானி. அப்படி இருந்தும் லலித் குமார் நிலானியை விடாமல் துரத்தி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து தான் நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் லலித் குமார் மீது புகார் அளித்தார்.

பொறுமை

பொறுமை

தன் குழந்தைகளுக்காக லலித் குமார் செய்த கொடுமைகளை எல்லாம் 3 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டதாக நிலானி தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் லலித் குமார் தனது குழந்தைகளையும் அடித்தார் என்கிறார் நிலானி. ஒரு முறை லலித் தாக்கியதில் காயம் அடைந்த நிலானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: abirami அபிராமி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X