அட அப்படியே இருக்கே.. அப்போ ஜீத்து தான் ஜார்ஜ் குட்டியா? திகிலை கிளப்பும் நெட்டிசன்ஸ்.. ரகளை!

சென்னை: மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் குடும்ப புகைப்படத்தை திரிஷ்யம் படத்தின் ஜார்ஜ் குட்டியின் குடும்ப புகைப்படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ரகளை செய்து வருகின்றனர்.

மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானது.

அருமையான திரைக்கதையில் உருவாகி உள்ள இந்த சீட் எட்ஜ் த்ரில்லர் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சூப்பர் த்ரில்லர்

சூப்பர் த்ரில்லர்

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரிஷ்யம் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் சூப்பர் த்ரில்லராக சக்கைப் போடு போடுகிறது.

விமர்சகர்கள் பாராட்டு

விமர்சகர்கள் பாராட்டு

ரிலீசாகும் படங்கள் எளிதில் மக்களின் மனங்களை வென்றுவிடும். ஆனால், சில விமர்சகர்கள் அந்த படங்களையும் கழுவி கழுவி ஊற்றுவார்கள். ஆனால், இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் நேர்த்தியான திரைக்கதை அதுபோன்ற விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருப்பதே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

குடும்பத்துக்காக

குடும்பத்துக்காக

திரிஷ்யம் படத்தின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். தனது மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டும் இளைஞர், ஜார்ஜ் குட்டி இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கே வந்து இச்சைக்கு இணங்க சொல்ல, ஜார்ஜ் குட்டியின் மனைவி மற்றும் மகள் சேர்ந்து வருண் என்கிற இளைஞரை கொன்று விடுவார்கள். வீட்டுக்கு வரும் ஜார்ஜ் குட்டியிடம் இதை சொல்ல, தனது குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி சினிமா அறிவை பயன்படுத்தி போலீசாரை முட்டாள் ஆக்கி தப்பிப்பது தான் கதை. இரண்டாவது பாகத்திலும் குடும்பத்துக்காகவே எல்லா கிரிமினல் வேலைகளையும் பக்காவாக செய்கிறார் ஜார்ஜ் குட்டி.

ஜீத்து ஜோசப் குடும்பம்

ஜீத்து ஜோசப் குடும்பம்

ஜார்ஜ் குட்டிக்கு இரு மகள்கள் உள்ளதை போலவே இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கும் இரு மகள்கள் உள்ளனர். தற்போது ஜார்ஜ் குட்டியின் குடும்ப புகைப்படத்துடன் ஜீத்துவின் குடும்ப புகைப்படத்தையும் வைரலாக ஷேர் செய்து ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி மீம்களாக ரகளை செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

கொலை கேஸ்

கொலை கேஸ்

காதல் திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்கள் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் நடந்த காதல் கதையையே வைத்து படத்தை இயக்குவார்கள். அது போலவே தனது வாழ்வில் நடந்த நிஜ கதையையே ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளாரா? என்ற பீதியை கிளப்பி அவரை கோர்த்து விடும் வேலையை ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்ஸ். ஜீத்து ஜோசப் வீட்டு பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷனில் அவர் மேல ஏதாவது கொலை கேஸ் இருக்கான்னு கேளு என பங்கம் செய்துள்ளனர்.

ஒருவேளை இருக்குமோ

ஒருவேளை இருக்குமோ

இது தான் திரிஷ்யம் ஃபேமிலி, இது தான் ஜீத்து ஜோசப் ஃபேமிலி என போட்டு, ஒரு வேளை இருக்குமோ என வடிவேலுவின் சந்தேக புகைப்படத்தையும் பதிவிட்டு வேற லெவல் ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். மேலும், திரிஷ்யம் படத்தை ஜீத்து இயக்க காரணமே ஏதாவது பிரச்சனை வந்தால், என் படத்தை வச்சே என்னை மடக்குறாங்க ஜட்ஜய்யா என சொல்லி தப்பிக்கத்தான் என்றும் கொளுத்திப் போட்டு வராங்க! ஜீத்து ஜோசப் சார் திரிஷ்யம் 3ல் என்ன பண்ண போறீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X