20 காயத்ரி.. 30 வனிதா.. 50 அர்ச்சனா.. சேர்ந்து செய்த கலவை பிரியங்கா.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் கமல் சார் தொகுத்து வழங்கும் முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.
கொரோனாவை வென்ற கமல் என மீம்களை எல்லாம் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் காது ஜவ்வுகள் கிழிந்து விடும் அளவுக்கு கத்துகிறார் பிரியங்கா அவரை விளாசி தள்ள வேண்டும் என ஏகப்பட்ட கோரிக்கைகளை அடுக்கி உள்ள ரசிகர்களின் ரியாக்ஷனை இங்கே பார்ப்போம்.

டெடிகேஷன் லெவல்
மருத்துவமனையில் இருந்து நேரடியாக இவிபி பிலிம் சிட்டிக்கு வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல மணி நேரம் ஓய்வில்லாமல் ஆண்டவர் தொகுத்து வழங்கி வருகிறார். அவருடைய டெடிகேஷன் வேற லெவல் என ரசிகர்கள் கமல் சாரின் கம்பேக்கை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராஜு மேல காண்டு
நாள் முழுக்க சமைத்து முடித்து விட்டு பாத்திரம் கழுவும் தாமரையை பார்த்து பரிதாபப்பட்டிருந்தால் அங்கே அமர்ந்து கொண்டு வசனம் பேசாமல் பிரியங்காவே போய் ஹெல்ப் பண்ணியிருக்கலாம் என்றும் பிரியங்காவுக்கு ராஜு மேல பாசம்லாம் கிடையாது.. ராஜு மேல காண்டு என மீம் போட்டு பிரியங்காவை டேமேஜ் செய்து வருகின்றனர்.

நீ பற்ற வைத்த நெருப்பு
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி ஏரிய உனைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்.. என மெர்சல் பட வசனம் எல்லாம் மீமாக போட்டு பிரியங்கா எப்படி தாமரைக்கு முத்தம் கொடுத்து கவிழ்கிறாரோ அதே போல அபிஷேக் பிரியங்காவுக்கு முத்தம் கொடுத்து கவிழ்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.

திடீர் பாசம்
பாவனி மிட் நைட் 3 மணிக்கு மொத்த வீட்டையும் தாமரையை பெருக்க சொல்லும் போது பிரியங்காவுக்கு ஏன் பாசமும் பரிதாபமும் பொங்கி எழ வில்லை என்றும் பாவனிக்கே அது தோணலையே என்றும் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

அபிஷேக்கிற்கே பிராங்க்
கமல் சார் மட்டும் நாளைக்கு எபிசோடில் அபிஷேக் நீங்க சேவ் ஆகிட்டீங்க என சொல்லி விட்டு.. சும்மா பிராங்க் பண்ணேன்.. வீட்டை விட்டு வெளியே போங்க என எவிக்ட் பண்ணா எப்படி இருக்கும் என ரசிகர்களே சூப்பர் ஐடியாவை கொடுத்து வருகின்றனர்.

20 காயத்ரி 30 வனிதா 50 அர்ச்சனா
பிரியங்கா தினமும் ராத்திரி சத்தமாக சிரிப்பதும் மோசமாக கத்துவதையும் பார்த்து குழந்தைகள் பயப்படுகின்றனர் என்றும் காது ஜவ்வே கிழிந்து விடுகிறது என்றும் ரசிகர்கள் பங்கம் பண்ணி வந்த நிலையில், இந்த நெட்டிசன் கொஞ்சம் ஓவராக சென்று "இருபது காயத்ரி, 30 வனிதா அக்கா, 50 அர்ச்சனா சேர்ந்து செய்த கலவை பிரியங்கா. முடியல.காது ஜவ்வு பிஞ்சு போச்சு.மக்களுக்கு நீ பண்றது பிடிக்குதுனு நினைக்கிற உன் மனசு இருக்கே பிகா வேறலெவல் நீங்க.. மக்களை இன்னும் உன்னைபோல பைத்தியமாவே நினைக்குறேல?" என கழுவி ஊற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications











