ஃபெஸ்டிவல் மோட்.. பார்ட்டி மோட்.. மீரா மிதுனின் போட்டோவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள இரண்டு போட்டோக்களை ஒப்பிட்டு நெட்டிசன்கள் லந்து செய்து வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தமிழ் படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் கடுப்பான மீரா மிதுன் இந்தி படங்களில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றார்.
மும்பையில் இருந்தப்படி தொடர்ந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், தமிழ் சினிமாவையும் சாடி வந்தார். அண்மையில் வெறும் பேண்டீஸுடனும் மேலாடை உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் நெட்டட் உடையை அணிந்து அரை நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.

அரை நிர்வாண போட்டோ
மீரா மிதுனின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். மீராவின் அந்த அரை நிர்வாண போட்டோ வைரலானது.

அசத்தல் மீரா மிதுன்
இந்நிலையில் நடிகர் சரவணன் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். தழைய தழைய புடவை, தலை நிறைய பூ, கை நிறைய வளையல், நெற்றியில் பொட்டு என அசத்தியிருந்தார் மீரா மிதுன்.
பார்ட்டி மோட்
மீரா மிதுனின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இதான் நம்ம பொண்ணுங்க..வீட்ல குடும்ப குத்து விளக்கு மாதிரி அதே பார்ட்டிக்கு போய்ட்டா வெளிநாட்டுகாரி போல என மீராவின் இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளனர்.

சேலையில்தான் அழகு
எப்போதும் அரைகுறை ஆடையில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் மீரா மிதுனை சேலையில் பார்த்த நெட்டிசன்கள், என்ன திடீரென சேலை உடம்புக்கு சரியில்லையா என கேட்டு வருகின்றனர். மேலும் பலர் சேலையில்தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.
இதான் சூட் ஆகுது
புடவைல தேவதை மாதிரி இருக்க உனக்கு ஏன் பெண்ணியம் பெண் சுதந்திரம் என் உரிமைங்கற பேர்ல இந்த அடாவடி!!!! இதே மாதிரியே இரு இதுதான் உனக்கு சூட் ஆகுது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











