கோவிலுக்குள் முத்தம் கொடுத்து புனிதத்தை கெடுப்பதா? நடிகை ஸ்ரேயாவுக்கு குவியும் கண்டனம்!

சென்னை: திருப்பதி கோவில் வளாகத்தில் முத்தமிட்டுக் கொண்ட நடிகை ஸ்ரேயாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Recommended Video

Actress Shriya Saran at Thirumala Tirupati Devasthanam with her Husband | Andrei Koscheev

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான சந்தோஷம் படம் பெரும் ஹிட்டானது.

75க்கும் மேற்பட்ட படங்கள்

75க்கும் மேற்பட்ட படங்கள்

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார் ஷ்ரேயா. இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஷ்ரேயா, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார்.

டென்னிஸ் வீரரருடன் திருமணம்

டென்னிஸ் வீரரருடன் திருமணம்

நடிகை ஷ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரருடன் காதல் உறவில் இருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு தனது காதலரான டென்னிஸ் வீரர் ஆண்ட்ரேய் கோஸ்ச்சீவை திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஷ்ரேயா அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்தியா வந்துள்ள ஷ்ரேயா

இந்தியா வந்துள்ள ஷ்ரேயா

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் தனது கணவருடன் பார்சிலோனாவில் இருந்தார் ஷ்ரேயா. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதாலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாலும் தனது கணவருடன் இந்தியா வந்துள்ளார் நடிகை ஷ்ரேயா.

திருப்பதி கோவிலில் வழிபாடு

திருப்பதி கோவிலில் வழிபாடு

கடந்த வாரம் மும்பையில் தனது கணவருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய நடிகை ஷ்ரேயா, நேற்று முன்தினம் தனது கணவருடன் திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அவர்கள் கோவிலில் வழிபாடு செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

கோவிலுக்குள் முத்தம் - கண்டனம்

கோவிலுக்குள் முத்தம் - கண்டனம்

இந்நிலையில் நடிகை ஷ்ரேயாவுக்கு அவரது கணவர் ஆண்ட்ரேய் திருப்பதி கோவில் வளாகத்திற்குள் வைத்து நெற்றியில் முத்தம் கொடுக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கோவிலுக்குள் முத்தம் கொடுத்து அதன் புனிதத்தை கெடுத்துவிட்டதாக நடிகை ஷ்ரேயாவுக்கும் அவரது கணவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள நடிகை நிமிஷா

மலையாள நடிகை நிமிஷா

அதேநேரத்தில் பலரும் தவறாக ஒன்றும் நடக்கவில்லை. அன்பின் வெளிப்பாடாக நெற்றியில் முத்தம் கொடுக்கிறார்கள் இதை தவறாக பார்க்க வேண்டாம் என நடிகை ஷ்ரேயாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். அண்மையில் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்பு அணிந்தப்படி பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ போட்டோ ஷூட் நடத்தினார்.

நண்பருடன் கைது செய்யப்பட்ட நடிகை

நண்பருடன் கைது செய்யப்பட்ட நடிகை

புனிதமாக கருதப்படும் பாம்பு படகில் செருப்பு காலுடன் ஏறிய நடிகைக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் விதித்தனர். பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள அந்த படகில் சென்ற நடிகை நிமிஷா பிஜோ தனது நண்பருடன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X