ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகள்.. இந்திய ரூபாயை கொச்சைப்படுத்தினாரா பிரியங்கா?

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடும் புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Cash in my Dessert என்ற கேப்ஷனுடன் 500 ரூபாய் நோட்டுகள் அலங்கரிக்கப்பட்ட ஐஸ் க்ரீம் கப்புடன் பிரியங்கா பதிவிட்ட போட்டோ தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழைகள் வாழும் நாட்டில், ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகளை அடுக்கி சாப்பிடுகிறாரே என கண்டனங்களும் எழுந்து வருகிறது.

ரியலா? ஃபேக்கா?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட ஐஸ்க்ரீம் சாப்பிடும் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது இந்திய ரூபாய் நோட்டை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என கண்டித்துள்ளனர். அதற்கு பிரியங்காவின் ரசிகர்கள் சிலர், அது உண்மையான ரூபாய் நோட்டு அல்ல போலி என சமாளித்து வருகின்றனர்.

எங்கே கிடைக்கும்

டெல்லியில் உள்ள தவுலத் கி சாட் ஐஸ்க்ரீம் பார்லரில் தான் இப்படி 500 ரூபாய் போன்ற போலி நோட்டுகள் அலங்கரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுகிறது. சாப்பாட்டு விரும்பியான பிரியங்கா சோப்ரா, அந்த ஐஸ்க்ரீமை தேடி சென்று சாப்பிட்டு, Cash in my dessert என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

போட்டோகிராஃபர் ஆன ஹீரோ

போட்டோகிராஃபர் ஆன ஹீரோ

பிரியங்கா ஐஸ்க்ரீம் சாப்பிடும் அந்த போட்டோவை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் எடுத்துள்ளார். ஸ்கை இஸ் பிங்க் படத்திற்கு பிறகு, ஒயிட் டைகர் எனும் படத்தில் ராஜ்குமார் ராவுடன் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். ஷூட்டிங் கேப்பில், தவுலத் கி சாட் கடைக்கு சென்று இருவரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுள்ளனர்.

காந்திஜி இல்லை

500 ரூபாய் நோட்டை ஐஸ்க்ரீமில் வைத்து சாப்பிடும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், காந்திஜி புகைப்படம் பதித்த ரூபாய் நோட்டை சாப்பிடும் பொருளில் வைத்து அவமதிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த ஃபேக் நோட்டில் காந்திஜி படம் அச்சடிக்கவில்லை என சில ரசிகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X