யாரு பார்த்த வேலைய்யா இது.. அவரோடு மீண்டும் கூட்டணி வைக்கும் கமல்? இணையத்தை திணறடிக்கும் போஸ்டர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் முகத்தை அரிவாளால் மறைத்தப்படி இருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறு குழந்தையாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலொச்சி வருகிறார்.

பல முகங்கள்...

பல முகங்கள்...

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதனால் இந்தியா முழுவதிலும் ரசிகர்களை கொண்டுள்ளார் கமல். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார்.

ஏராளமான விருதுகள்

ஏராளமான விருதுகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் தொகுப்பாளராகவும் தடம் பதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம் ஃபேர் விருதுகள், பத்ம ஸ்ரீ , பத்மபூஷன் மற்றும் கலைமாமணி என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

போலீஸ் அதிகாரியாக...

போலீஸ் அதிகாரியாக...

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாஸில், நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பாதி முகத்தை அரிவாளால் மறைத்தப்படி இருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போன்று உள்ள அந்த போஸ்டரில் படத்தின் பெயர் ராயன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் அவருடன் கூட்டணியா?

மீண்டும் அவருடன் கூட்டணியா?

மேலும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்றும் கலைப்புலி எஸ் தாணு இயக்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த

ரசிகர்கள் இது உண்மையா? கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் மீண்டும் கமல் நடிக்க போகிறாரா? என விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆளவந்தான் படத்தால் மோதல்

ஆளவந்தான் படத்தால் மோதல்

ஏற்கனவே கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படத்தை தயாரித்து இருந்தார் கலைப்புலி தாணு. அந்தப் படத்தின் போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கமல் சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு அவரால் தனக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார் தாணு.

கண்டுபிடித்த நெட்டிசன்கள்

கண்டுபிடித்த நெட்டிசன்கள்

இந்நிலையில் இணையத்தை திணறடிக்கும் இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் இருவரும் கூட்டணி வைக்கப்போகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அந்த போஸ்டர் போலியான ஒன்று என்பதை நெட்டிசன்களே கண்டுபிடித்துள்ளனர்.

பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்

பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்

அதாவது அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள கமல் ஹாசன் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது. அதோடு உலக நாயகன் என்றும் வழக்கத்திற்கு மாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், நிச்சயம் இது யாரோ பார்த்த வேலைதான் என்று கூறி வருகின்றனர்.

பெயரை மாற்றாமல்..

பெயரை மாற்றாமல்..

மற்றொரு நெட்டிசனான இவர், இப்போது இருக்கும் பசங்களுக்கு கமலுக்கும் கலைப்புலி தாணுவுக்கும் இடையிலான மோதல் குறித்து தெரியாது என்பதால் இந்த போஸ்டரில் தயாரிப்பாளர் பெயரை மாற்றாமல் வெளியிட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

2021-ல் அதிகம் பேசப்பட்ட Suriya, Vijay, Ajith | Jaibhim, Thala Ajith, Rolls Royce
கவுதமி பேர் கூட வரும்

கவுதமி பேர் கூட வரும்

வைரலாகும் இந்த போஸ்டரை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், விஷயம் அறியாத 2K சிறுவன் எவனோ ஒருவன் செய்த பிழை. இன்னும் கொஞ்ச நாள்ள பாருங்க.. கவுதமி பேரல்லாம் கூட வரும் ! என கிண்டலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X