என்ன பண்றது.. சேர்க்கை சரியில்லையே.. ஆஜித்தின் அம்மாவுக்காக கவலைப்படும் நெட்டிசன்ஸ்!
சென்னை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் ஆஜித்தின் அம்மாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆஜித்தின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது தெரியவந்தது.
ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய ஆஜித்தின் குடும்பத்தினர் ஏன் அவருக்கு யாருமே அறிவுரை கூறவில்லை என்று கேட்கின்றனர்.

நெட்டிசன்ஸ் கருத்து
அதற்கு பதில் சொன்ன ஆரி, என் வாயை அடைத்து விட்டார்கள். டிப்ஸ் கொடுத்தேன், அட்வைஸ் என்று என் வாயை அடைத்துவிட்டார்கள் என்று, ஆஜித்துக்காக தான எடுத்த முயற்சியை கூறினார் ஆரி. அதனை ஆஜித்தின் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சேர்க்கை சரியில்லையே..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன பண்றது ஆஜித்து அம்மா!.. ஆஜித்தின் சேர்க்கை சரியில்லையே!.. இப்ப நீங்க சொல்லி என்ன பிரயோசனம்.. என்று ஆஜித் பாலாஜியுடன் ஒட்டி உரவாடியதை குறிப்பிட்டுள்ளார்.

யாருடா கேட்கிறீங்க?
புரமோவில் ஆஜித்தின் குடும்பத்தினர் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், எக்ஸாக்ட்லி.. இதைத்தான் ஆரியும் ஆஜித்திடம் கூறினார். யாருடா கேட்கிறீங்க என்று பதிவிட்டுள்ளார்.

ஆரிதான் எதிரி
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிக்கு ஹவுஸ்மேட்ஸின் ரியாக்ஷன் ஆடியன்ஸை தாண்டி வேறுபட்டது. விளையாட்டில் அவர்கள் வெற்றி பெற நினைக்கும் போது ஆரி சிறப்பாக விளையாடியதால் ஹவுஸ்மேட்ஸுக்கு அவர் எதிராளி. இது சிம்பிள் லாஜிக் என்று பதிவிட்டுள்ளார்.

நீ யோக்கியமான்னு கேட்குறாங்க
இரண்டாவது புரமோவில் ஆஜித்தின் குடும்பத்தினர் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நல்லதை சொன்னா எவன் கேக்குறான்?.. நீ என்ன யோக்கியாமான்தான் திருப்பி கேக்குறானுக! என்று விளாசியுள்ளார்.

மிக்சர் சாப்பிடுகிறார்..
புரமோவில் ஆஜித் குடும்பத்தினர் பேசியதை கேட்ட இந்த நெட்டிசன், ஆண்ட்டி.. இது தான் ஆரி புரோ சொன்னார் ஆஜித் கேட்கவில்லை!! அதனால் தான் இன்னமும் பிக்பாஸ் வீட்டில் #மிக்சர் சாப்பிட்டு இருக்கிறார் என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

இப்போ ஞானம் பிறக்கிறது..
புரமோவில் ஆரி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி என்ன சொன்னாரோ அது 100% உண்மை.. ஒரேயொரு தடவைதான் ஆஜித்திடம் பேசினார்... அதற்கு எல்லா ஹவுஸ்மேட்ஸும் சே்ந்து அட்வைஸ் பண்றாரு ஆரின்னு 3 வாரம் கத்திட்டே இருந்தாங்க.. அதோட ஆஜித்துக்கு எந்த டிப்ஸும் ஆரி கொடுக்கல.. இப்ப எல்லாருக்கும் காலம் கடந்த ஞானம் பிறக்கிறது.. என்று விளாசியுள்ளார்.

உள்ளேயே புரிஞ்சிப்பார் போல..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆஜீத் வெளியே வந்து ரியலைஸ் பண்ணுவான்னு பார்த்தேன் ஆனா உள்ளேயே புரிஞ்சிப்பார் போல என்று கூறியுள்ளார்.

அரசியலில் பிரதிபலிக்கும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் டிவி எப்பொழுதும் தகுதியற்றவர்களை வெற்றி பெற செய்யும். இம்முறையும் அதுவே. பாவம் மக்கள் நீதி மய்யம். ஆரியை தவிர வேறு யார் வற்றி பெற்றாலும் இந்த வலி அரசியலில் பிரதிபலிக்கும்.. என்று கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அட்வைஸ் ஆரின்னு முத்திரை
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அட்வைஸ் ஆரின்னு முத்திரை குத்திடானுக. அதனால ஆரி அட்வைஸ் பண்ண முடியல!.. பயில்வானுக்கு அடிமையா ஆஜித்து மாறிட்டதால பயில்வானும் அட்வைஸ் பண்ணல. எடுபுடி வேலை மட்டும் பண்ண சொன்னாரு பயில்வான்! என்று பாலாஜியை விளாசியுள்ளார்.
Recommended Video

அப்போதே கேட்டிருந்தால்..
ஆரி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், தலைவா.. என் வாயைதான் அடைச்சுட்டாங்களே.. மனுஷன் அப்பவே சொன்னாரு.. அதை கேட்டிருந்தா.. ஆஜித் இப்பவும் மிக்சரா இருந்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











