twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படியா கேவலமா பாட்டு எழுதுறது.. விளாசும் நெட்டிசன்கள்.. விஜய் தேவரகொண்டா போட்ட ட்வீட்!

    |

    ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள லைகர் திரைப்படத்தில் இடம்பெற்ற Aafat பாடல் படு ஆபாசமாக உள்ளதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

    70களில் வில்லன்கள் பாலியல் பலாத்காரத்திற்காக ஹீரோயின்களிடம் பேசும் வார்த்தையை பாடல் வரிகளாக எப்படி வைத்தார்கள் என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அதற்கு மன்னிப்பு கேட்காமல், போட்டுள்ள பதில் மேலும், சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    ட்விட்டரில் நேரலை.. விஜய் ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விக்ரம்.. உற்சாகமான ரசிகர்கள்!ட்விட்டரில் நேரலை.. விஜய் ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விக்ரம்.. உற்சாகமான ரசிகர்கள்!

    நிர்வாண சர்ச்சை

    நிர்வாண சர்ச்சை

    ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கு முன்னதாகவே லைகர் படத்திற்காக விஜய் தேவரகொண்டா நிர்வாணமாக நின்றபடி இருக்கும் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், லைகர் படத்தின் பாடல் புதிய பூகம்பத்தையே கிளப்பி படத்துக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது.

    பலாத்கார வரிகள்

    பலாத்கார வரிகள்

    பாடல் வரிகளில் பலாத்கார வசனங்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை லைகர் படத்தின் ஆஃபாத் பாடலை கேட்டவுடனே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சோஷியல் மீடியாவில் அந்த பாடல் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ள நிலையில், பலரும் விஜய் தேவரகொண்டாவை விளாசி வருகின்றனர். எப்படி இவ்வளவு கேவலமான வரிகளை பாடலில் இடம்பெறச் செய்யலாம் என்றும் சென்சாரில் இந்த பாடல் வரிகளை கட் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    சமந்தா பாட்டு

    சமந்தா பாட்டு

    முதலில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடல் ஆண்களை தவறாக சித்தரித்து உருவானதற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்த நிலையில், தற்போது டோலிவுட்டின் அடுத்த படமான லைகர் படத்தின் பாடலிலும் இப்படியொரு மோசமான வரிகள் இடம்பெற்றிருப்பது கண்டனத்துக்குரியது என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா ட்வீட்

    விஜய் தேவரகொண்டா ட்வீட்

    லைகர் படத்தின் பாடல் சர்ச்சை பெரிதாகி வரும் நிலையில், அதற்கு விளக்கமளிக்காமல் நடிகர் விஜய் தேவரகொண்டா, பிரஸ்மீட்டில் அவர் ஓவர் ஆட்டிட்யூடாக நடந்து கொண்டதை விமர்சித்த தொலைக்காட்சி பேட்டியை ஷேர் செய்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களை மேலும், கடுப்பாக்கி உள்ளது.

    கடவுள் காப்பாத்துவாரு

    கடவுள் காப்பாத்துவாரு

    ஒரு துறையில் வள்ர்ச்சியடைய நினைத்து போராடினால், அதற்கு பல தரப்பில் இருந்து இதுபோன்ற எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால், விடாமல் நாம் தான் போராடணும். நாம் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கடவுள் நம்மை காப்பாத்துவாரு என விஜய் தேவரகொண்டா ட்வீட் போட்டுள்ள நிலையில், இந்த பாடல் பிரச்சனைக்கு முதலில் பதில் சொல்லுங்க என வச்சு செய்து வருகின்றனர்.

    English summary
    Netizens criticise Vijay Deverakonda's Liger song for using 'abuse scene' dialogue in lyrics shocks fans. Vijay Deverakonda also slammed for doing over attitude in press meet, he replied for that in his twitter handle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X