நீங்க ஏன் விவாகரத்து செய்யக்கூடாது.. சின்மயியை மோசமாக விமர்சித்த இணையவாசிகள்!
சென்னை: இன்று ஏதாவது கன்டென்ட் கிடைக்காதா என இணையவாசிகள் பலரும் காத்துக் கொண்டு இருந்த நேரத்தில், பாடகி சின்மயி போட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி, இன்று சின்மயி ட்ரோல் மெட்டீரியலாகி பலரும் கடுமையான வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் நேற்று 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். அரங்கில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு முட்டித் தள்ளினார்கள். இதனால், நடிகை நிதி அகர்வால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். இதன் பின் பாதுகாவலர்கள் விரைவாக செயல்பட்டு, அவரை கூட்டத்திலிருந்து விலக்கி மீட்டு காரில் ஏற்றினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பலர் கண்டனத்தை பதிவிட்டுவந்தனர்.

பாடகி சின்மயி: இதை கண்டித்த சின்மயி தனது எக்ஸ் தளபக்கத்தில், கழுதைப்புலிகளை விட மோசமாக நடந்துகொள்ளும் ஒரு கும்பல் ஆண்கள். உண்மையில், கழுதைப்புலிகளை சொல்லி ஏன் அவமானப்படுத்த வேண்டும்? ஒரே மனப்பான்மை கொண்ட ஆண்களை ஒரு கும்பலாகச் சேர்த்தால், அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் துன்புறுத்துவார்கள். ஏதாவது ஒரு கடவுள் இவர்களையெல்லாம் அழைத்துச் சென்று வேறு ஒரு கிரகத்தில் ஏன் விடக்கூடாது? என பதிவிட்டு இருந்தார். சிலர் இந்த பதிவினை வரவேற்ற போதும், பலர் சின்மயியை மோசமான வார்த்தையால் திட்டி வருகின்றனர்.
ஒரு இணையவாசி, என் கருத்துப்படி, அங்கே அதிகக் கூட்டம் இருக்கிறது, ஒரு பிரபல நபர் வந்தால், யார் வேண்டுமானாலும் சென்று புகைப்படம் எடுக்க விரும்புவார்கள். அந்த இடம் அதிகக் கூட்டமாக இருப்பதால், தெரிந்தே அல்லது தெரியாமலேயே மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொள்வார்கள் அல்லது தள்ளப்படுவார்கள். அது எப்படி துன்புறுத்துவமாக மாறும், உங்கள் பதிவு அர்த்தமற்றதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஆண்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு: மற்றொருவர், நீங்கள் ஆண்களின் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டவராக இருந்தால், ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழக்கூடாது, அது இன்னும் சிறப்பாக இருக்குமே என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளித்து இருக்கும் சின்மயி, அந்த ஆண்களைப் போல ஒரு பாலியல் குற்றவாளியை திருமணம் செய்துகொள்ளவில்லை, அவர்களில் ஒருவரைப் பெற்றெடுக்கவும் இல்லை. அப்படி இருக்கும் போது, நான் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? நான் பாலியல் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். நீங்கள் ஏன் அவர்களைப் பாதுகாக்க ஓடி வருகிறீர்கள்? நீங்கள் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு குழந்தையையோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்தைச் செய்தவரா? என, அவரின் மூக்கை உடைக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











