என்னங்கடா.. நேத்து நடந்த பிரச்சனையோட தடம் எதுவுமே இன்னைக்கு புரமோல இல்ல.. ஏமாந்துபோன நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்காக பட்டி மன்றம் நடத்தப்படுகிறது. பிக்பாஸ் வீடு ஆனந்த குடும்பம் மற்றும் போட்டிக்களம் என இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது புரமோவில் தெரியவந்துள்ளது.

ஆனால் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தியை சனம் ஷெட்டி கதறவிட்டது தொடர்பான எந்த சுவடுமே தெரியவில்லை. இதனால் நொந்து போயுள்ளனர் நெட்டிசன்கள். மேலும் இன்றைய புரமோ குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸே இல்ல..

புரமோவில் அறந்தாங்கி நிஷா, புறணி பேசுறதே ஒரு அழகு என்று கூறியதை தொடர்ந்து புறணி இல்லன்னா இந்த பிக்பாசே இல்லை நிஷா!.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நேராக சொல்லிடு

புரமோவில் நிஷா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், நிஷா நீதான் தைரியமான ஆளாச்சே மூஞ்சுக்கு நேராகவே சொல்லிவிடு என்று கூறியுள்ளார்.

வேஷம் போட்டிருக்கும் விஷம்

வேல்முருகனின் போட்டேவை பகிர்ந்துள்ள இந்த நெட்டிசன், இந்தாளு உண்மையிலேயே அப்பாவி வேஷம் போட்டிருக்கும் விஷம் என்று கூறியுள்ளார்.

புஸ்ஸென்று போய்விடும்

நிஷா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நிஷாவுக்கு ஏற்கனவே பட்டிமன்றம் புதுசு அல்ல.. இதுதான் நிஷாவின் சுற்று....வைச்சு செய்ய போற என்று எல்லாரும் நினைப்பாங்க ஆனால் புஸ் என்று போய் விடும்!!! என கிண்டலடித்துள்ளார்.

திருடனுக்கு தேள் கொட்டியது

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் புறணி பேசுபவர்கள் என நிஷா கூறியபோது, சுரேஷுக்கு திருடனுக்கு தேள் கொட்டியதுபோல மூஞ்சி போகுதே.. என கூறியுள்ளார்.

யாரா இருந்தாலும் செருப்படி

புரணி பேசுறது அழகுங்க ஆனா ஒருத்தரோட உருவத்தையும் உள்ளத்தையும் உடைக்கும் போது அது அசிங்கம் என்று பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், நீ யார சொல்லுறேன்னு தெரியல ஆனா அது யாரா இருந்தாலும் செருப்படி.. என பாராட்டியுள்ளார்.

எந்தத் தடமும் இல்லையே

மற்றொரு நெட்டிசனான இவர், என்னங்கடா நேத்து நடந்த பிரச்சனையோட தடம் எதுவுமே இன்னைக்கு ப்ரோமோல இல்ல ! புதுக் களமா இருக்கு! இங்கயாச்சும் பிரச்சினை வருமா? நிஷா ஆல்ரடி பட்டிமன்ற பேச்சாளர் ! ஓவரா பேசுவாங்களே !ரியோ வேற எதாவது பேசி ஸ்கோர் பண்ண நினைப்பான் ! ஆனால் வாங்குறது மொக்க என கிண்டலடித்துள்ளார்.

அதிகாரம் பண்ணுவாங்களே

பட்டி மன்றத்தில் நடுவராக அர்ச்சனா இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா நடுவரா.. நாட்டாமை நல்லாத்தான் பண்ணுறாங்க ஆனா அத ரொம்பவே அதிகாரமா பண்ணுவாங்களே.. என பதிவிட்டுள்ளார்.

மற்றவங்க சண்டை போட்ருவாங்க

மற்றொரு நெட்டிசனான இவர், மூஞ்சிக்கு பின்னாடி மட்டுமா ஒருத்தர் தப்பா பேசுறதுனா அது சனமும் அனிதாவும் தான். மத்த எல்லாரும் மூஞ்சிக்கு நேரா சண்டை போட்டுருவாங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அனிதா பேசித்து இருக்கும்

புரமோவில் அனிதா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு பிக்பாஸ் பாக்கவே தேவையில்ல, முழுசா அனிதாவே பேசிட்டு இருக்கும்.. என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X