லைக் பண்ண.. ஆர்டி பண்ண.. ஒரு நாதியும் இல்லை.. என்ன பிக்பாஸ் நிலைமை இப்படி ஆகிப்போச்சு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோக்களுக்கு சமூக வலைதளங்களில் கொஞசமும் வரவேற்பில்லை என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டு புரமோக்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன், ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கிறார்.

இரண்டாவது புரமோவில் கேப்டன் டாஸ்க்கின் போது சின்னப்பொண்ணுவின் பலூன் எப்படி உடைந்தது என்று கேட்டு விளாசினார்.

லைக்ஸ் இல்லை

லைக்ஸ் இல்லை

ஆனால் வழக்கமாக சமூக வலைதளங்களில் லைக்ஸ்களையும் ஆர்டிக்களையும் குவிக்கும் பிக்பாஸ் புரமோக்கள் இம்முறை லைக்ஸ் கொடுக்கக்கூட ஆள் இல்லாமல் தள்ளாடி வருகிறது. மிக சொற்ப அளவிலேயே பிக்பாஸ் புரமோக்களுக்கு லைக்ஸ் வந்துள்ளது.

உனக்கு கொஞ்சமாச்சும் புரியுதா?

உனக்கு கொஞ்சமாச்சும் புரியுதா?

கமெண்டுகளும் குறைந்த அளவிலேயே வந்துள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள், அதையும் கமெண்ட்டாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, 20 நிமிஷத்துல வெறும் 212 லைக், 27 ரீட்வீட், 30 கமெண்ட்ஸ்.. அடேய் விஜய் டிவி உனக்கு கொஞ்சமாச்சும் புரியுதா இல்லையா... இப்படியே போச்சுன்னா கஷ்டம்டா... எடிட்டிங் சொதப்பல்.. ப்ரோமோ சொதப்பல்.. மார்னிங் டேன்ஸ் சொதப்பல்.. கன்டென்ட் குடுக்குற கண்ட்ஸ்டண்ட் ரொம்பவே கம்மி.. என பதிவிட்டுள்ளார்.

சீக்கிரம் சொல்லுங்க ஆண்டவரே

சீக்கிரம் சொல்லுங்க ஆண்டவரே

இரண்டாவது புரமோவை பார்த்த இந் நெட்டிசன், வெளியேறுவது அபிசேக்கா?.. சின்னபொண்ணா?... ரகசியம் வைக்காம சீக்கிரம் சொல்லுங்க ஆண்டவரே.. நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு இன்றே தெரிந்துவிடும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

தாமரைக்கு ஆதரவு தரலாம்ணே..

தாமரைக்கு ஆதரவு தரலாம்ணே..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
தாமரை செல்விக்கு ஆதரவு தரலாம்ணே! என மீம் பதிவிட்டுள்ளார்.

கன்டென்ட் கொடுக்க மாட்றாங்க

கன்டென்ட் கொடுக்க மாட்றாங்க


இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
இந்த கருமத்த போட இவ்ளோ நேரமா புரமோ கட் பண்ற அளவுக்கு கூட இந்த சீசனில் யாரும் கன்டென்ட் கொடுக்க மாட்றாங்க வொர்ஸ்ட் சீசன் என பதிவிட்டுள்ளார் இந்த சீசன்.

அர்ச்சனா பாதி ரம்யா பாண்டியன் பாதி

அர்ச்சனா பாதி ரம்யா பாண்டியன் பாதி

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா பாதி ரம்யா பாண்டியன் பாதி கலந்த கலவைதான் பிரியங்கா..

லைக் பண்ண ஒரு நாதியும் இல்லை

லைக் பண்ண ஒரு நாதியும் இல்லை

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் புரமோக்களை லைக் பண்ண ஆர் டி பண்ண ஒரு நாதியும் இல்லை.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X