'அயோக்கியா'த்தனம்: பார்த்திபனின் ட்வீட்டுக்கு ப்ளூ சட்டை மாறன் காரணமா?
Recommended Video
சென்னை: பார்த்திபனின் 'அயோக்கியா'த்தனம் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் என்ன சார் ப்ளூ சட்டை விமர்சனத்தை பார்த்துவிட்டு பேசுகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யா நேற்று ரிலீஸானது. ரொம்ப நாள் கழித்து பார்த்திபனை பழைய நக்கல் ஃபார்மில் பார்த்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பார்த்திபனோ அயோக்யா தன்னுடைய உள்ளே வெளியே படத்தின் கதை என்று ட்வீட் செய்துள்ளார்.
உள்ளே வெளியே
அயோக்யா படத்தில் நடிக்கும்போது கதை கேட்டவுடனே இந்த உண்மை பார்த்திபனுக்கு தெரியவில்லையா. கதையை கேட்காமலா அவர் படங்களில் நடிக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்த பிறகு 'அயோக்கியா'த்தனம் என்று ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பார்த்திபன்
படத்திலும், படத்திற்கும் பார்த்திபன் தான் வில்லன் என்கிறார்கள். அவர் சும்மா போட்ட ட்வீட்டால் இந்த அளவுக்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு விளம்பரம் தேடவே பார்த்திபன் இப்படி ட்வீட்டியதாகவும் கூறப்படுகிறது.
பணம்
என்ன பார்த்திபன், உங்க படத்தின் கதை என்று கூட தெரியாமலா நடித்திருப்பீர்கள்? இதெல்லாம் நம்பும்படியா உள்ளது.


Click it and Unblock the Notifications











