பிக்பாசு.. நீயும் பயில்வானுக்கு அல்லக்கையா மாறிட்டீயா? புரமோவை பார்த்து காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் எபிசோடிலேயே பாலாஜி - ஷிவானி இடையேயான லவ் ட்ராக் காட்டப்பட்டது.
மொத்த ஹவுஸ்மெட்ஸும் அந்தாக்ஷரி விளையாடிக் கொண்டிருக்க ஷிவானியும் பாலாஜியும் பெட்டில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.

அல்லக்கையாகிவிட்டார்
பிக்பாஸ் வீட்டில் வேற சம்பவங்களே நடக்காதது போல் ஷிவானியையும் பாலாஜியையும் மட்டுமே காட்டுவது ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸும் பாலாஜியின் அல்லக்கையாகிவிட்டார் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேற வேலை பார்க்கலாம்
ஏற்கனவே பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் புரமோவில் பாலாஜியையே காட்டுவதால் கடுப்பான இந்த நெட்டிசன், இப்படி பயில்வான் துதி பாடுவதற்கு வேற வேலை பார்க்கலாம்!.. என துப்பியுள்ளார்.

விளங்கிடும்
கமல் சார், இவங்க லவ் பண்ணட்டும் பண்ணாம போகட்டும்.. நிறைய நல்ல கன்டெஸ்டன்ட் இருக்குறாங்க. எதாவது டாஸ்க் கொடுத்துட்டே இருந்தா தான் மத்தவங்க வெளிய தெரிவாங்க. எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருந்தா விளங்கிடும்.. அந்த வீணா போன.. விஜய் டிவி எண்டேமால்ஷைன்க்கிட்ட சொல்லுங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அல்லக்கையா மாறிட்டீயா..
புரமோவில் பாலாஜியின் ரொமான்ஸ் மட்டுமே காட்டப்பட்டதால் கடுப்பான இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு நீயும் பயில்வானுக்கு அல்லகையா மாறிட்டீயா என விளாசியுள்ளனர்.

அருவருப்பா இருக்கு..
உண்மையிலேயே அருவருப்பா இருக்கு.. இந்த காதல் ட்ராக் சுச்சி ஃபோர்ஸ் செய்ததால் வந்துள்ளது. யாரும் இதை கேட்கவேயில்லை... எங்களுக்கு இது வேண்டாம்.. உண்மையிலேயே நிறுத்துங்கள்.. என கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அங்க நிக்குற நீ..
கன்டென்டே கிடைக்காத மாதிரி இதை புரமோல போடுற பாரு அங்க நிக்குற நீ என பிக்பாஸை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











