அர்ச்சனாவுடன் கூட்டு சேர்ந்தவர்களை எல்லாம் ஊடு கட்டி அடிக்கிறாங்களே.. குஷி மோடில் நெட்டிசன்ஸ்!
சென்னை: அனிதா ரியோவை வச்சு செய்ததை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அனிதா, ரியோவை சீண்டியுள்ளார். தைரியம் இல்லையா என்று அனிதா கேட்டதால் கடுப்பான ரியோ பதிலுக்கு அனிதாவை விளாசினார்.
இதனால் இரண்டாவது புரமோவில் அனல் பறக்கிறது. இந்நிலையில் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அடப்போங்கயா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தைரியமில்லாமல் மழுப்புறது உளர்றது எப்பவுமே ரியோ தான்
மாற்றுக் கருத்து இருக்கா இதுல? அதை தைரியமா முகத்துக்கு நேரா சொல்லிவிட்டா ஓவர் கான்ஃபிடன்ஸ். அடப்போங்கயா.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

டிஸ்மேண்டில் செய்வதுதான்
அனிதா ரியோவிடம் மல்லுக்கட்டும் போது ஆரியின் ரியக்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், அவரது ரியாக்ஷனை ஷேர் செய்து அப்பாடா கஷ்டப்பட்டு கிளாஸ் எடுத்தது வீணாப்போல.. என்று நினைப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒரே குறிகோள் லவ் பெட் கேங்கை டிஸ்மேண்டில் செய்வதுதான் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஒளிந்து கொள்கிறார்கள்
பெரிய தலைகள் எல்லாம் நாமினேட்டில் மாட்டிகொள்ளும்போது புள்ளபூச்சிகள் எல்லாம் நாமினேட்டில் சிக்காமல் பதுங்கி ஒளிந்துகொள்கின்றனவே! எனவே ஆஜித், கேபி, ஷிவானி ஆகியோரை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மிக்சர் சாப்டே..
எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க வெளியே போறாங்க.. ஆனால் ஷிவானி மட்டும் கடைசிவரைக்கும் மிக்சர் சாப்டே பைனல் போயிடுவா போல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விட்டுவிடுகிறீர்களே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்களுக்குள் சண்டை போட்டுகிட்டே இந்த மிக்சர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறீர்களே! என்று கலாய்த்துள்ளனர்.

அன்பு இல்லை வம்பு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாரபட்சம் பாக்காம அனைவர் மேலும் வருவதற்கு பெயர் தான் அன்பு. ஒரு சில பேரிடம் மட்டும் வருவதற்கு பெயர் அன்பு இல்லை வம்பு.
அதை தான் அர்ச்சனா அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார் என விளாசியுள்ளார்.

ஊடு கட்டி அடிக்கிறாங்களே
ரியோவை அனிதா வச்சு செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவுடன் கூட்டு சேர்ந்தவர்களை எல்லாம் ஊடு கட்டி அடிக்கிறாங்களே.. என கலாய்த்துள்ளார்.

இந்த வாரம்..
தம்பி.... பார்த்துப்பா... இந்த வாரம் வெளியேறும் நபராக இருக்க போறீங்க! என்று ரியோ எகிறுவதை பார்த்து கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video

ஒரே மாதிரி இருக்காது
இந்த வாரம் எதோ ஒரு மிகப்பெரிய தவறை நோக்கி அனிதா.. எல்லா வாரமும் ஒரே மாதிரி இருக்காது கன்னுகுட்டி.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











