அன்பு டீமோட அடி வயித்துலேயே கைய வச்ச அனிதா.. அதகளமாகும் பிக்பாஸ் வீடு.. ஜாலி மோடில் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அன்பு கேங்குக்கு ஆப்பு வந்துவிட்டது என கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் ரோபோக்களுக்கு பெயர் வைத்த விவகாரத்தில் நிஷாவையும் ரியோவையும் கோர்த்துவிட்டார் அனிதா.
இதனால் நிஷாவும் ரியோவும் ஆவேசமாகி அனிதாவிடம் எகிறினர். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் அனிதாவை கொண்டாடி வருகின்றனர்.

அடிமைகளின் அட்டகாசம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அடாவடி அர்ச்சனாவின் அடிமைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகுதே! என குறிப்பிட்டுள்ளார்.

அப்படி கேளு அனிதா
புரமோவில் அனிதா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அப்படி கேளு அனிதா.. அவள பேச வச்சுட்டு அப்புறம் பாஸ்ஸி சொல்லிட்டானு ஒப்பாரி வைக்கிறது அர்ச்சனா. அப்போ கரெக்ட் பண்ண வேண்டியது தானே ரியோ அன்ட் நிஷா ஏன் அழறீங்க இது டாஸ்க்குன்னு என்று பதிவிட்டுள்ளார்.

விட்டா அடிப்பாங்க போல
ஒண்ணா பேசி பேசி மெத்தட் ரெடி பண்ணிட்டு தன் குலதெய்வம் அர்ச்சனா மனம் வருத்தப்படக்கூடாதுனு பலிய ஆரி, அனிதா மேல திருப்பிவிடறது தான் லாயல்ட்டி படுத்திறபாடு.. நிஷா விட்டா அடிப்பாங்க போல அனிதாவ.. என கூறியுள்ளார்.

டம்மி மம்மி..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடிமைகளுக்கு நல்லா மஜாஸ் பண்ணி, தன் புரோகிராமை அடிமைகளின் மண்டையில் நல்லா ஏத்திவிட்டுயிருக்கு இந்த டம்மி மம்மி! என விளாசியுள்ளார்.

லவ் பெட் காரணம்?
புரமோவில் அனிதா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா சொல்லுவது 100% உண்மை தான்!! அர்ச்சனா கோபப்படுத்தியது நிஷா தான் ஆனால் யாரும் அவளை நாமினேட் பண்ணல ஏன்?
லவ் பெட் காரணம்? என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அடி வயித்துல கை
அன்பு டீமோட அடி வயித்துல கை வைச்சா நம்ம பெண் சிங்கம்.. ஒத்த ஆளு அன்பு டீமை அடிச்சு போட்டு சிங்கிளாக நிக்கிறா.. சனம் அப்புறம் போல்டான ஆனா லேடி கேம் ஷோவை நல்லா புரிஞ்சிக்கிட்டு விளையாடுற.. விளையாடும்மா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஜெயிலில் போடுங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சுவாரசியம் குறைவாய் இருந்தவர் அப்படினா பிக்பாஸ் தான் நாமினேட் பண்ணனும். ஏற்கனவே நாடா காடா போட்டியை மீண்டும் மனிதர் மெஷின் என்று பட்டி டிங்கரிங் செய்து சுவாரசியம் குறைத்து. சரியான விதிமுறை இல்லாதது. விளக்கம் கேட்ட போது சொல்லாதது. பிக்பாஸ் ஜெயிலில் போடுங்கள் என்று கூறியுள்ளார்.

வேடிக்கை பாக்கறீங்க..
மற்றொரு நெட்டிசனான இவர் டீம்மா சேர்ந்து தான பேரு வச்சீங்க. சொன்னது மட்டும் தான் அவ. நல்லா கோர்த்து விட்டு வேடிக்கை பாக்கறீங்க.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video

கடைசி வாரம்..
இந்த வாரம் நிஷா பர்ஃபாமன்ஸ் ஓவரா இருக்கு.
அது சரி கடைசி வாரம். பண்ணு.. பண்ணு.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











