விடாதீங்க பிக்பாஸ்.. நல்லா வச்சு செய்யுங்க.. தரமான சம்பவம்.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

Recommended Video

கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் 4ல் இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் இந்த டாஸ்க் கொஞ்சம் டஃப்பான டாஸ்க்காக பார்க்கப்படுகிறது.

தீயாய் வேலை..

தீயாய் வேலை..

பிக்பாஸ் வீட்டில் 45 மணிநேர மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மெட்ஸ் உடலையும் மூளையையும் வருத்திக்கொண்டு ஈடுபட்டுள்ளனர். இதுவரை பேசியே மொக்கை போட்டு வந்த ஹவுஸ்மெட்ஸ் தீயாய் வேலை செய்வதை பார்த்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

தரமான சம்பவம்

பிக்பாஸின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உட்கார கூட விடாதீங்க பிக் பாஸ் இவனுங்கள.
பேசியே மொக்க போடுறானுங்க.. நல்லா வச்சு செய்ங்க
தரமான சம்பவம்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

டஃப்பான டாஸ்க்..

கடைசியா எல்லாரும் பங்கேற்பது போன்ற டாஸ்க் கொடுத்திருக்காங்க பிக்பாஸ் கிரியேட்டிவ் டீம். இவ்ளோ நாள் தூங்கிட்டு இருந்திருப்பாங்க.. ஆமாம்.. இவங்கள பேசவே விட கூடாது.. இவ்ளோ நாள் அப்டிதானே எங்கள சாகடிச்சாங்க.. இப்போ அவனுங்களுக்கே டஃப்பான டாஸ்க் கொடுத்திருக்காங்க.. சூப்பர்.. எனக்கு சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.

நடிப்பு காதல் நட்டுக்கிச்சு

நேற்றைய நிகழ்ச்சியில் பாலாவுக்கும் ஷிவானிக்கும் பிரேக்கப் ஏற்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானின் நடிப்புகாதல் நட்டுகிச்சு!... புட்டுகிச்சு! என பதிவிட்டுள்ளார்.

ஒன்னுமே புரியல..

முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன டா டாஸ்க் ஒன்னுமே புரியல!! என கூறியுள்ளார்.

பிரிச்சு விடுங்க..

மற்றொரு நெட்டிசனான இவர், ஒருவழியா திருந்திட்டிங்களா பிக்பாஸ். இந்த மாதிரி டாஸ்க்க்கு தான் வெய்டிங். அதே நேரம் குருப்ப சரியா பிரிச்சு விடுங்க. இதுலயும் அர்ச்சனா கேங் ஒன்னா இருக்க போகுதுங்க என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

விறுவிறுப்பாக இருக்கும்

இறுதியாக நல்ல டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X