உங்கள் அனைவரின் வன்மமும் இப்போது விஷமாக மாறி நிற்கிறது.. புரமோவை பார்த்து குஷியாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றையா இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம குஷியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பேசிய நடிகர் கமல், எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றது எந்த மாதிரியான உணர்வை கொடுத்தது என்று கேட்டார்.

மேலும் எல்லோரும் காத்து போன பலூன் போன்று இருக்கிறீர்கள் என்றும் கூறினார் கமல். அதற்கு பதில் சொன்ன ஹவுஸ்மேட்ஸ் ஆமாம், அவர்கள் கூறியது எங்களை அப்செட்டாக்கிவிட்டது என்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

கார்னர் பண்றாங்க..

கார்னர் பண்றாங்க..

புரமோவில் ரம்யா பாண்டியன் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா பாண்டியன், மட்டும் தனியா இருக்காங்க.. கார்னர் பண்ணுறாங்க போல.. இவ்ளோ தாங்க பிக்பாஸ் என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

நானே ரெடி பண்ணிட்டேன்

நானே ரெடி பண்ணிட்டேன்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், "எனக்கு யாரும் கப்பு கொடுக்கவேண்டாம் நானே ரெடி பண்ணிட்டேன்" பல்புபாலா! என பாலாஜியை மரண பங்கம் செய்துள்ளார்.

விஷமாக மாறி நிற்கிறது

விஷமாக மாறி நிற்கிறது

நீங்கள் விதைத்தது விளைந்திருக்கிறது மூடர்களே. ஒருவனை வெறிபிடித்த கூட்டமாக சேர்ந்து எவ்வளவு வன்மமாக நடத்துனீங்க. உங்கள் அனைவரின் வன்மமும் இப்போது விஷமாக மாறிநிற்கிறது. கொஞ்சநாளைக்கு அது தேளாக உங்களை கொட்டத்தான் செய்யும் தாங்கிக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தயவு செய்து சிரிக்க வேண்டாம்

தயவு செய்து சிரிக்க வேண்டாம்

புரமோவில் ரம்யா சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், எம்மா விஷ பாட்டில் ரம்யா உன் பெயர் தான் ஹெவியா டாமேஜ் ஆகி இருக்கிறது.. தயவுசெய்து சிரிக்க வேண்டாம்... என கூறியுள்ளார்.

ஆரிக்கு கொடுத்துட்டு கிளம்புங்க!

ஆரிக்கு கொடுத்துட்டு கிளம்புங்க!

என்ன ஆண்டவரே வளவளன்னு பேசிக்கிட்டு!... டக்குன்னு கப்பை ஆரிக்கு கொடுத்துட்டு கிளம்புங்க!... எங்களுக்கும் வேற வேலை இருக்கு!

தவறுகள் செய்ததன் பிரதிபலன்

தவறுகள் செய்ததன் பிரதிபலன்

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிறர் வாட பல தவறுகள் செய்ததன் பிரதிபலன். ஆரியை இரு கூட்டமும்
ஒன்றாக சேர்ந்து எப்படி எல்லாம் ஓரம் கட்டி ரசித்து சிரித்தீர்கள் அன்று.. அதுமனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தால் மக்கள் தீர்ப்பும் மகிழ்ச்சியாக ஏற்க வேண்டியது தானே. பொறாமையை விட்டாலே மகிழ்ச்சி உள் நுழைந்து விடும் இவ்வாறு கூறியுள்ளார்.

நற்பண்புகள் குடியிருக்கும் கோவில்

நற்பண்புகள் குடியிருக்கும் கோவில்

இரண்டாவதை புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதை அறிந்தாலும் எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் அடுத்தவர் கவலை கொள்ளும் போது எவ்வாறு மனம்வாடி கேட்கிறார்.. நற்பண்புகள் குடியிருக்கும் கோயில் ஆரி என புகழ்ந்துள்ளார்.

புலம்ப வேண்டியதான்

புலம்ப வேண்டியதான்

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிக்கு மக்களிடம் ஆதரவில்லை, அவரை மக்கள் திட்டி தீர்க்கிறார்கள் என வந்தவர்கள் சொல்லயிருந்தால் இந்நேரம் ரம்யா பாண்டியன், ரியோ, சோம், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் ஆடித்தீர்த்திருப்பர். தான் வெற்றிபெற விளையாடாமல், ஒருவன் தோற்கவேண்டும் என விளையாடினால் இப்படி புலம்ப வேண்டியதுதான் என சாடியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X