வாண்ணா வாண்ணா.. வந்து இறங்கியடி.. மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார்ப்பா..ரமேஷால் குஷியான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம குஷியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில், தனக்கு ஒன்று முதல் 6 ரேங்குக்குள் வழங்க வேண்டும் என்று கூறிய பாலாஜியை செமயாக வெளுத்து வாங்குகிறார் ஜித்தன் ரமேஷ்.

அவமரியாதையாகவும் தரக்குறைவாகவும் பேசி மொத்த இமேஜையும் டேமெஜ் செய்துவிடும் பாலாஜியிடம் பேச சக ஹவுஸ்மேட்ஸ் பயந்து வருகின்றனர்.

ரமேஷ் கேட்ட கேள்வி

ரமேஷ் கேட்ட கேள்வி

ரம்யா, ரியோ, ஷிவானி, ஆஜித் போன்ற சிலர் அவருக்கு சொம்படித்து வருகின்றனர். இந்நிலையில் பாலாஜியிடம் படு தைரியமாக பேசி அவருக்கு ஆப்பு வைத்துள்ளார் ஜித்தன் ரமேஷ். ரமேஷ் கேட்கும் கேள்விகளால் விழிபிதுங்கி நிற்கிறார் பாலாஜி. இதனை பார்த்த நெட்டிசன்கள் ரமேஷை கொண்டாடி வருகின்றனர்.

இவ்ளோ லென்த்தாவா போகுது?

இவ்ளோ லென்த்தாவா போகுது?

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அந்த டாஸ்க்கு இன்றுவரை அவ்வளவு லென்தாவா போகுது? என கேட்டுள்ளார்.

 இன்பமாய் இருக்குதய்யா

இன்பமாய் இருக்குதய்யா

புரமோவில் ரமேஷ் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன் இப்போது ஃபயர் மோடில் இருக்கிறார் என்றும், ரமேஷ் ஆர்மி ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும் இப்போ.. இன்பமாய் இருக்குதய்யா! என்றும் பதிவிட்டுள்ளார்.

முட்டாளாக்க பார்ப்பார்

முட்டாளாக்க பார்ப்பார்

புரமோவில் பாலாஜி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், முட்டாள்தனமா பேசி மற்றவர்களை முட்டாளாக்க பார்ப்பாரு இந்த பயில்வான் என விளாசியுள்ளார்.

ஆரிக்கு புரிய வில்லை

ஆரிக்கு புரிய வில்லை

மற்றொரு நெட்டிசனான இவர் நல்லவனாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை இன்னும் ஆரி புரிந்து கொள்ளாமல் இருக்காரே அதான் அவரையே அட்டாக் பண்றாங்க வெளியில நடக்கிறது அவங்களுக்கு தெரியாதில்ல அதுவும் ஒரு காரணம்.. என பதிவிட்டுள்ளார்.

புத்திசாலின்னு சொல்லிருப்பாங்க

புத்திசாலின்னு சொல்லிருப்பாங்க

எந்த டாஸ்க்கும் இந்த பயில்வானுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது... அடுத்தவங்களை பேச விட்டாதானே யாரு வெற்றியாளன்னு தெரியும்!... யாரோ இந்த பயில்வான் காதில் நீ புத்திசாலி.. நீ புத்திசாலின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க போலிருக்கு! என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

அசிங்கப்படுத்திட்டானாம்

அசிங்கப்படுத்திட்டானாம்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னயா பொசுக்குனு ஆரிய கலாய்ச்சிட்டாரு ரமேஷ் என்று கூறியுள்ளதோடு, அதற்கு ஆரியின் ரியாக்ஷன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் என்ன ஒரு கிளுகிளுப்பு பாலாஜிக்கு ஆரிய அசிங்கப்படுத்திட்டானாம்! என்று பாலாஜியையும் கழுவி ஊற்றியுள்ளார்.

கப்பை ஆட்டைய போட..

கப்பை ஆட்டைய போட..

பாலாஜிக்கு மீண்டும் ஷிவானி ஊட்டிவிடுவதை பார்த்த இந்த நெட்டிசன், கடலை போட்டே கப்பை ஆட்டையபோட பார்க்கும் கடலை பயில்வான் என பாலாஜியை கலாய்த்துள்ளார்.

புலம்பி தீர்க்கிறாரே..

புலம்பி தீர்க்கிறாரே..

புரமோவில் ரமேஷ் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ரமேஷ் ஆரிக்கு பக்கத்து பெட்டா ஆரி நைட்டு புல்லா தூங்காம புலம்புனாரு என இவரு புலம்பி தீர்க்கிறாரே என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

கல்யாணம் ஒரு சூதாட்டம் | ACTRESS VIMALA RAMAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL
வந்து இறங்கி அடி

வந்து இறங்கி அடி

ஜித்தன் ரமேஷ் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், வாண்ணா வாண்ணா வாண்ணா வந்து இறங்கி அடி மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார்ப்பா பாயிண்ட்ஸ என பாராட்டியுள்ளார். மேலும் ஜித்தன் ரமேஷ் பேசிய டயலாக்கையும் பதிவிட்டு பாலா திருட்டு முழி முழிப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X