இனியும் நக்கல் நய்யாண்டி வருமா? தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ, பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது.

இதில் கடைசி வரை ரம்யாவை அலைக்கழித்து அசிங்கப்படுத்திவிட்டனர். தான்தான் டைட்டில் வின்னர் என்ற எண்ணத்தில் இருந்த ரம்யாவுக்கு இந்த முறை எவிக்ஷனில் இறுதிவரை சென்றது பெருத்த அவமானமாகிவிட்டது.

என்னா பேச்சு..

என்னா பேச்சு..

கடந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று அனிதாவிடம் ஒரு மாதிரியும் ஆரியிடம் ஒரு மாதிரியும் ஆஜித்திடம் ஒரு மாதிரியும் பேசினார் ரம்யா. மேலும் ஆரி எப்படி முதல் நபராக வெளியேறுகிறார் என்றும் விவாதித்து வந்தார்.

பெட்டியுடன் அலைந்த ரம்யா

பெட்டியுடன் அலைந்த ரம்யா

இந்நிலையில் இன்று கடைசி வரை பெட்டியுடன் ரம்யா அலைந்ததை பார்த்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இனியும் சிரிப்பீர்களா என்றும் கேட்டு கிண்லடித்து வருகின்றனர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு

கழுதை தேய்ந்து கட்டெறும்பு

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாராவாரம் கலகம் பண்ணிவிட்டு கண்ணீர் விடும் கலகக்கார பாலாவை கமல் ஏன் வெளியேற்றவில்லை.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது கமல் நடத்தும் இந்நிகழ்ச்சியின் தரம் என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

முதல்வர் லட்சனம் தெரியுது

முதல்வர் லட்சனம் தெரியுது

பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்காமல் அவரை காப்பாற்றப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவர் உங்க முதல்வர் லட்சனம் தெரியுது என நடிகர் கமலை விளாசியுள்ளார்.

என்னப்பா இது அநியாயம்?

என்னப்பா இது அநியாயம்?

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சொங்கிபாலாவுக்கு ரெட்கார்டு கொடுக்க சொன்னா ஆஜித்துக்கு ரெட்கலர் கொடுக்கிறாரு.. என்னப்பா இது அநியாயம்? என கேட்டுள்ளார்.

தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்

தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்

மூன்றாவது புரமோவில் கடைசி வரை வாழ்வா சாவா என ரம்யா பாண்டியன் தவித்த தவிப்பை பார்த்த இந்த நெட்டிசன், சாயம் வெளுத்த நரிக்கு... இனியும் நக்கல் நய்யாண்டி வருமா?.. தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்! என வச்சு செய்துள்ளார்.

ஏன் கண்டிக்கவில்லை?

ஏன் கண்டிக்கவில்லை?

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எங்க சார் ஆரம்பிச்சிங்க.. அதுதான் புஸ் என்று போச்சு.. பாலாஜி விஷயத்தில்.. நீங்க பிக் பாஸ் டீம் தான்.. தெரிஞ்சு போச்சு.. அர்ச்சனா மைக் போடலன்னு சொன்ன நீங்க.. மைக்கை உடைத்த பாலாஜி கண்டிக்கவில்லை ஏன்? என விளாசியுள்ளார்.

கடுப்பு ஆயிருக்கீங்க

கடுப்பு ஆயிருக்கீங்க

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கண்டிப்பா ரம்யாக்குலாம் நிறைய ஓட்டுகள் விழுந்து இருக்கும்!! செம்ம செய்கை விஜய் டிவி.. நேற்றும் இன்றும் தாங்கள் செய்யும் செயல்கள் யாவும் முழு நிறைவை தரா விட்டாலும் இன்று ரம்யா முகத்தில் பயம் கலந்த சிரிப்பு நேற்று பாலா செய்கை.. நீங்களும் எங்களை மாதிரி கடுப்பு ஆயிருக்கீங்க என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X