இருந்தா இரு... இல்லன்னா கீழே இறங்கிப்போ... பிரியங்காவை வெளுத்து வாங்கும் தாமரை..
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் பிக்பாஸ் ஃபினாலே ரேஸ் ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய ரேங்க் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சிபி இந்த வார நாமினேஷன் புராசஸில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் ஃபினாலே ரேஸாக பஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கார்டன் ஏரியாவில் பஸ் வந்து நிறுத்தப்பட்டதும் ஹவுஸ்மேட்ஸ் போட்டிப் போட்டுக்கொண்டு ஏறி அமர்ந்தனர்.

ஓட்டம் பிடித்த ஹவுஸ்மேட்ஸ்
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே துர்நாற்றம் உடைய தண்ணீர் ஷவர் செய்யப்பட்டது. இதை தாக்குப்பிடிக்க முடியாத போட்டியாளர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். எஞ்சியிருந்த போட்டியாளர்கள் தங்களுக்குதான் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாக்கு வாதம் செய்கின்றனர். அந்த வகையில் முதல் புரமோவில் ராஜுவிடம் வாக்குவாதம் செய்த தாமரை அவரை கீழே இறக்கிவிட்டார்.

என்ஜாய் பண்ணுங்க
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த புரமோ பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், பிரியங்கா வெர்சஸ் தாமரை, மக்களே எந்த பக்கத்தையும் பார்க்காதீர்கள்.. சண்டையை என்ஜாய் பண்ணுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இல்லன்னா இறங்கிப்போ..
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இருந்தா இரு இல்லனா கீழ எறங்கிப்போ.. ஒரே டயலாக்... முதல் புரமோவில் ராஜுவிடம், இரண்டாவது புரமோவில் பிரியங்காவிடம் என தாமரை பேசியதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரும் சேம் பிளட் என கூறி கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க
புரமோவில் ராஜுவும் சிபியும் கீழே அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா என்ஜாய் பண்றாங்கப்பா... என்னம்மோ பிக்னிக் வந்தா மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க என்று பதிவிட்டுள்ளார்.

அவங்க இருக்காங்களே..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சஞ்சீவ்,சிபி ஏன் இறங்கினாங்க.. அந்த #அபினய் அமீர் உள்ளே இருக்காங்களே.. என்று பதிவிட்டுள்ளார்.

தைரியமா இரு தாமரை
புரமோவில் தாமரையிடம் பிரியங்கா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பேசவிடாம பண்ணி உசுப்பேத்தி அழவச்சு வெளியே அனுப்பிவிடலாம்னு நினைச்சியா.. வாய மூடுனு சரியா சொல்லிட்டாங்க. பிரியங்கா எப்போவும் போல ஸ்ட்ரேட்டர்ஜி செல்லாது இன்னைக்கு.. தைரியமா இரு தாமரை என பதிவிட்டுள்ளார்.

ஊருக்கே தெரியும்..
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
என்னப் பேசினாலும் அசரமாட்டிற.. என பிரியங்கா தாமரை குறித்து பேசியதை குறிப்பிட்டு, இதுக்கு பேர்தான் உசுப்பேத்துறதுன்னு ஊருக்கே தெரியும் போ.. என பதிவிட்டுள்ளார்.

தெரிந்ததன் விளைவு
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நேற்று தாமரைக்கு புரியல அதுல வெற்றி பெற்றால் அதன் பயன் நாம் நாமிநேஷன்லேந்து தப்பிச்சுக்கலாம்னு. இன்று அது தெரிந்ததன் விளைவு.. இல்லைனா சிபிய ஓரம் கட்டி முதல் இடத்துக்கு வந்திருக்கும் வாய்பேச்சு டாஸ்க்கில் எனபதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











