Don't Miss!
- News
பிரதமர் மோடி வருகை.. சென்னைவாசிகளே இந்த பக்கம் போகாதீங்க.. நெரிசலில் சிக்கவேண்டியிருக்கும்
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரியங்கா ஃபேமிலி வரும் போது ஒலிக்கப்பட்ட வலிமை பாடல்... கொண்டாடும் ரசிகாஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று பிரியங்காவின் குடும்பத்தினர் வந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபிரிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது வழக்கம்.
பீஸ்ட் ஷூட்டிங்கை முடித்த விஜய்... வேறலெவல் அப்டேட் இதோ!
அந்த வகையில் இந்த சீசனில் தற்போது நடைபெற்று வரும் ஃபிரிஸ் டாஸ்க்கில் இதுவரை அக்ஷராவின் குடும்பத்தினர், சிபியின் குடும்பத்தினர் நிரூப்பின் குடும்பத்தினர் மற்றும் ராஜுவின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.

பிரியங்காவின் ஃபேமிலி
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிரியங்காவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆகியுள்ளனர். அவர்களை பார்த்ததும் கதறி அழுகிறார் பிரியங்கா. அம்மாவை கட்டியணைத்து அழும் பிரியங்கா தம்பியை பார்த்ததும் சிரித்து மகிழ்கிறார்.

எல்லாரும் குழந்தைகள் ஆயிடுவோம்
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, அம்மா முன்னாடி எல்லாரும் கிண்டர் கார்டன் குழந்தைகள் ஆயிடுறோம் . அம்மாகிட்ட எவ்வளவு தான் சண்டை போட்டாலும் .என் அம்மா இருந்திருந்தா என்ற டயலாக்கை அவங்க இல்லாதப்போதான் உணருவோம். அம்மா இருக்கறவங்க நிஜமாவே லக்கி தான்.. என பதிவிட்டுள்ளார்.

அதற்கு தகுதியானவர்தான்
இன்றைய மூன்றாவது புரமோவில் பிரியங்காவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் போது வலிமை பட பாடல் ஒலிக்கப்பட்டது குறித்து இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார். அதாவது பிரியங்காவுக்கு வலிமை பாடல்... அவர் அதற்கு தகுதியானவர்தான். பிரியங்கா அம்மா மற்றும் தம்பி வருகை என குறிப்பிட்டுள்ளார்.

பிரவீன வர சொல்லுங்க
இன்றைய இரண்டாவது புரமோவில் பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் வருவதை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாஸ் அப்படியே கன்ஃபெஷன் ரூம்ல இருந்து அந்த பிரவீன வர சொல்லுங்க ப்ளீஸ் என பதிவிட்டுள்ளார். பிரியங்காவின் கணவர் பெயர் பிரவீன் என்பதால் அவரை வருமாறு அழைத்துள்ளார் இந்த நெட்டிசன்.

பெருமைபட வைத்துள்ளீர்கள்..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அவ்... பிரியு... ஹேப்பி... ஜாலியா இருடாம்மா... எல்லாம் பாத்துக்கலாம்... பிரியங்கா என்ற அமேஸிங் பர்சனுக்காக நீங்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள்... நீங்கள் உங்கள் அம்மாவையும் மற்றும் எங்கள் எல்லோரையும் பெருமைபட வைத்துள்ளீர்கள்.. மகிழ்ச்சியாக என குறிப்பிட்டுள்ளார்.

ரெட் அன்ட் வொய்ட்
இன்றைய இரண்டாவது புரமோவில் பிரியங்காவின் அம்மாவும் சகோதரரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். இதில் பிரியங்காவும் அவரது அம்மாவும் ஒரே நிற உடை அணிந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அம்மாவும் மகளும் சிவப்பு மற்றும் வெள்ளை உடை அணிந்துள்ளதாக கூறியுள்ளார்.