Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
டயலாக்கை உளறி தள்ளும் ஆண்ட்ரியா.. என்ன செஞ்சாலும் ரொம்ப கியூட் நீங்க கொஞ்சும் ரசிகர்கள்!
சென்னை: பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா .
நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் ஆண்ட்ரியா.
தற்போது பிசாசு 2 படத்தில் டப்பிங் பணிகள் நடந்து வருவதால் அதில் செய்த சுதப்பல்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
ஒரு வழியா பிரம்மாண்ட புரமோஷனை ஆரம்பிச்சிட்டாங்க.. பொன்னியின் செல்வன் டீசரை யார் வெளியிடுறா தெரியுமா?

ஹிட் படங்கள்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், போன்ற பல படங்களில் நடித்தார். துப்பறிவாளன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரல வைத்தார் ஆண்ட்ரியா. விஸ்வரூபம்,தரமணி, வடசென்னை போன்ற படங்கள் இவரது பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்தது.

பல திறமைகள்
ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும்,டப்பிங் கலைஞராகவும் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கு டப்பிங் செய்ததும் நடிகை ஆண்ட்ரியா. அவருக்கு மட்டும் இல்லாமல், நண்பன் படத்தில் இலியானாவிற்கும், ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், தங்க மகன் படத்தில் எமி ஜாக்சனுக்கும் குரல் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

பாடகியாக வெற்றி
அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேலே ஆசை தான், மன்மதன் அன்பு படத்தில் ஹூ இஸ் தி ஹீரோ, துப்பாக்கி படத்தில் கூகுல் கூகுல், புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா போன்ற பல ஹிட் பாடல்கள் இவரது லிஸ்டில் உள்ளது.
தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கான டப்பிங் வேலைகளும் நடந்து முடிந்துள்ளது. விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த படத்தை இயக்கியவர் மிஷ்கின். பிசாசு 2 படத்தில் தமிழ் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தெலுங்கு வர்ஷனுக்கும், ஆண்ட்ரியா டப்பிங் செய்துள்ளார்.
Recommended Video

சொதப்பிய ஆண்ட்ரியா
முதல் முறையில் தெலுங்கில் டப்பிங் செய்வது இதுவே ஆண்ட்ரியாவுக்கு முதல் முறை. அதனால் டப்பிங் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா. டயலாக்கை சொதப்பும் நடிகை ஆண்ட்ரியா கியூட் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. என்னதான் சொதப்பினாலும், இவரது குரல் படத்திற்கு பலம் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன செய்தாலும் கியூட்டா தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது அனல் மேலே பனித்துளி, கா, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை போன்ற பல படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.