இன்னும் தலைவன் விஷால் வரல.. அப்புறம் இருக்குப் பாருங்க.. விஜயகாந்துக்கு அஞ்சலி.. ரசிகர்கள் ட்ரோல்!
சென்னை: மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர்களை எந்தவொரு ரசிகரும் ட்ரோல் செய்யவில்லை. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்துடன் முடித்து விட்டு பொறுமையாக வந்து விஜயகாந்த் சமாதியில் அழுது புலம்பி அஞ்சலி செலுத்தி வரும் நடிகர்களை பார்த்து மேடம் இது நடிப்பு மேடம் என்றும் இன்னும் என் தலைவன் விஷால் வரல என்றும் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரபலம் ஒருவரின் மறைவுக்கு வந்தாக வேண்டும் என்பது யாருக்குமே கட்டாயம் கிடையாது. ஆனால், அதே சமயம் சினிமாவுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் பல நன்மைகளை செய்த ஒருவர் இறப்புக்கே அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் வேறு என்ன நல்லது செய்து விடப் போகின்றனர் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் வைக்கத்தான் செய்கின்றனர். யார் யார் என்ன என்ன செய்கின்றனர் என்பதை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் உன்னிப்பாக உற்று நோக்கி வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட விஷாலை காணோம்: கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் வெளிநாட்டில் புத்தாண்டு பிராங்க் எல்லாம் செய்து சொந்தங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த விஷால் திடீரென "அண்ணே நான் அங்கே இருந்திருக்கணும் அண்ணே.. வெளிநாட்டில் இருக்கேன்.. வர முடியல.. என்னை மன்னிச்சிடுங்க" என வீடியோவெல்லாம் வெளியிட்டு இருந்தார். அவருக்கு இன்னுமா சென்னைக்கு ஃபிளைட் கிடைக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை: கார்த்தி, சிவகுமார், சூர்யா, சசிகுமார், அருண் விஜய், சிவராஜ்குமார், எம்.எஸ். பாஸ்கர், எஸ்.ஏ. சந்திரசேகர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். நடிகர் சூர்யா கண்ணீர் மல்க உருகி அழுத காட்சிகளை பார்த்து அவரது ரசிகர்கள் ஃபீல் பண்ண நிலையில், அதெல்லாம் நடிப்பு என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் ட்ரோல் செய்தனர்.
தலைவன் விஷால் வரட்டும்: இதெல்லாம் என்ன பிரம்மாதம் ஸ்பெஷல் ஐட்டமே இனிமேல் தான் என தலைவன் விஷால் வந்து பண்ணுவாரு பாரு ஒரு ஃபர்பார்மன்ஸ் என எம் மகன் படத்தில் வடிவேலு தனது தந்தை இறந்து விட்ட செய்தி அறிந்து அவர் புதைத்த பின்னர் தாமதமாக வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் காட்சிகளை வீடியோ மீமாக போட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











