இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு.. என்ன குரளி வித்தை காட்டினாலும்.. அடுத்து நீங்கதான் அன்னப்பூரணி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

பாலாவை தெளிய வைத்த ஆரி, இனி ஆட்டம் ஆரம்பம் | Bb4 Day 64 Highlights | Oneindia Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதில் அனிதாவும் பாலாஜியும் மாறி மாறி அர்ச்சனாவை டார்கெட் செய்டு கதற விட்டனர்.

லேட்டான புரமோ

லேட்டான புரமோ

இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்று டாஸ்க் முடிந்ததும் பிக்பாஸ் வீட்டில் தரமான சம்பவங்கள் இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்றைய பிக்பாஸ் புரமோ வர தாமதமானதையும் நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

இவ்ளோ நேரமாய்யா?

பிரமோ வருவதற்கு தாமதமானதை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு.. கட்... காபி... பேஸ்ட்... பண்ணுவதற்கு இவ்ளோ நேரமாய்யா? என கேட்டுள்ளார்.

இரிட்டேட்டிங்கா இருக்கு

தாமதமாக புரமோ ஷேர் செய்யப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், வர்றது லேட்டு இதுல அர்ச்சனா மூஞ்சிய காட்டினா ஒரே இரிட்டேடிங்கா இருக்கு பங்கு.. என பதிவிட்டுள்ளார்.

சண்டை மூட்ட சரியான டாஸ்க்

பிக்பாஸில் கொடுக்கப்பட்டுள்ள லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு!.. நீ பலே கில்லாடிய்யா!... சண்டை மூட்ட சரியான டாஸ்கைதான் கொடுத்திருக்கே!... ஆமா சண்டை வருமா? என கேட்டுள்ளார்.

எபிசோடில் வராது..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த புரோமோல வரும்... ஆனா டோட்டல் எபிசோடில் வராது... என புரோமோவில் வருவது எபிசோடில் மிஸ்ஸாவதை கிண்டலடித்துள்ளார்.

ஃபைட்டை எதிர்பார்க்கலாம்

டாஸ்க் அப்படினு வரும் போது அர்ச்சனா பெஸ்ட் கொடுக்குற மாதிரி தான் தெரியுது.. வெயிட்டிங் எவன் சொதப்பி வேணும்னு சண்டை போட போறான்னு பாப்போம்.. பாலாஜி ஆரி ஒரே டீம் சூப்பர் சூப்பர்.. அனிதா சம்பத் vs ரமேஷ் ஃபைட் எதிர் பார்க்கலாம் போல என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நடிக்காதீங்க அர்ச்சனா

வெயிட் பண்ணினது வொர்த் இல்லை.. முன்னாடியே புரமோ போட்டு இருக்கலாம்.. அன்னபூரணி அர்ச்சனா தனது நடிப்பு திறமையை நிரூபிக்க தயாராக உள்ளார்.. நடிக்காத என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

என்னத்துக்கு சொன்ன?

டாஸ்க் முடிஞ்ச உடனே ஒரு சண்டை இருக்கு.. அனிதா vs ரமேஷ்.. ராஜா வீட்டு கன்னுக்குட்டின்னு இப்போ என்னத்துக்கு சொன்னன்னு என்று கணித்துள்ளார் இந்த நெட்டிசன்.

லட்சங்களில் இருக்கும்

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், 50 லட்சம் கண்ணு முன்னாடி வரும்.. அதனால எல்லாத்தையும் தாங்கிக்க முடியும். மேலும் அர்ச்சனாவுக்கு டெயிலி கான்ட்ராக்ட் லட்சங்களில் தான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

வெளியே அனுப்புறதுதான்..

என்ன பர்ஃபாமன்ஸா? நீ என்னதான் குரளி வித்தை காட்டினாலும் அடுத்தவாரம் உன்னைய வெளிய அனுப்புறதுதான் எங்க மொத வேலை... என்று குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், அர்ச்சான கண்ணீர் விடும் காட்சியையும் ஷேர் செய்துள்ளார்.

சம்பவம் இருக்கும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அதான, அனிதா வேணும்னே அவங்களுக்கு புடிக்காத பட்டப்பேரலாம் யூஸ் பண்ணுது டாஸ்க் முடிஞ்சதும் சம்பவம் இருக்கும் போல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X