எரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீடு கால் செண்டராய் மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
இதில் பாதி ஹவுஸ்மேட்ஸ், கஸ்டமர்களாகவும் பாதி பேர் கால் செண்டர் ஊழியர்களாகவும் உள்ளனர். இதுதான் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் என தெரிகிறது.

கால் செண்டர்
இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரச்சனைகளையே ஹவுஸ்மேட்ஸ் பேசி தெளிவு பெறுவதாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பேசும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதை விமர்சித்துள்ளனர்.

புரிந்துவிடுமா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கரடுமுரடாக வளர்ந்த பயில்வானுக்கு கண்ணியம்னா என்னவென்றே தெரியாது.. இந்நிகழ்வுக்கு பிறகாவது பயில்வானுக்கு புரிந்துவிடுமா? என கேட்டுள்ளார்.

பிஸிக்கல் டாஸ்க் இல்லையா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க கேக்கும் கேள்விகளுக்கு எந்த வரைமுறையும் கிடையாது.. அது சரி இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டில் பிஸிக்கல் டாஸ்க் இல்லையா..
மறுபடியும் பேசுற டாஸ்க் தானா.. அங்க சில பேரு எப்படா ஏழறைய இழுக்கலாம்னு இருக்கானுங்க அதுக்கு ஏத்த மாதிரி டாஸ்க் கொடுக்குறீங்கடா என விளாசியுள்ளார்.

டவர் பிராப்லம் போல
இந்த டாஸ்க்கிலும் ஜித்தன் ரமேஷ் பங்கேற்க மாட்டார் என்பதை கிண்டலடிக்கும் வகையில் ஜித்தன் ரமேஷ் ரைட் நவ்..
ஹலோ நீங்க பேசுறது சரியா கேட்க மாட்டேங்குது, டவர் பிராப்லம் போல என கூறுவார் என்று பங்கம் பண்ணியுள்ளார்.

இவ்ளோ லேட்டா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வடிகட்டுன பண்ணாடை பயில்வான் போன்ல பேசறதை புரோமாவா போடத்தான் இவ்ளோ லேட்டா பிக்பாசு? என விளாசியுள்ளார்.

பேசியே சாவடிக்க போறீங்க..
ரைட்டுடா.. ஆகா கடைசி வரைக்கும் இந்த பிஸிக்கல் டாஸ்க்குன்னு ஒன்ன கண்ணுளையே காட்ட மாட்டீங்க அப்படி தானே.. பேசியே சாவடிக்க போறீங்க.. நடத்துங்கடா!! என அலுத்துக்கொண்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வாய்பூட்டு போடுவோம்
பாலாஜியால் கடுப்பாகியுள்ள இந்த நெட்டிசன், வம்பு சண்டையாலேயே உடம்பை வளர்த்த பயில்வானுக்கு நாங்கள் வாய்பூட்டு போடுவோம்.. என கூறியுள்ளார்.

எண்ணெய ஊத்துறீங்க
பிக்பாஸின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டின், எரியிற நெருப்பில நல்லா எண்ணெய ஊத்துறீங்க.. பிக்பாஸ் என விளாசியுள்ளார்.

முட்டாள் திட்டம் போட்டால்
பாலாஜி ஆரியின் காலில் விழும் போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், முட்டாள் திட்டம் போட்டால் முடிவில் இப்படிதான் ஆகும்! என கழுவி ஊற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











