கவின் - சாக்ஷி பண்ற காதல் டார்ச்சருக்கு வனிதா பண்ண தொல்லையே மேல்டா சாமி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் சாக்ஷி இடையேயான காதலை பார்த்து நெட்டிசன்கள் வெறுப்பாகி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் ஒரு வழியாக சாக்ஷியை காதலிக்க தொடங்கினார். அதோடு மற்ற பெண்களிடம் கடலை போடுவதை நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போதும் அடங்காத கவின், லாஸ்லியாவுடன் கடலை போட்டு வந்தார். அதுவே கவினின் காதலுக்கு வேட்டு வைத்து விட்டது.

விளாசும் ரசிகர்கள்
லாஸ்லியாவுடன் கவின் பழகுவதை விரும்பாத சாக்ஷி, கவினுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார். இதுதொடர்பாக இருவரும் தனியாக பேசி வரும் புரமோ இன்று வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். இருவரையும் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்
அப்போ நல்லாருந்துச்சா?
இப்படி தானே அபிராமிக்கு இருந்துருக்கும்... அப்போ நல்லாருந்துச்சா? என கேட்கிறார் இவர். காரணம் அபிராமி கவினை காதலிக்கிறார் என்று தெரிந்தும் கவினை காதலிக்க தொடங்கினார் சாக்ஷி.
மச்சான்னு மட்டும் சொல்லாத
டேய் கவின் என்ன வேனும்னாலும் பண்ணு தயவு செய்து மச்சான்னு மட்டும் சொல்லாத.. கேட்கவே கடுப்பா இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன்.
உண்மையா இருடா
இந்த கவின் சாக்ஷிக்கிட்டயும் ஷேர் பண்றான். லாஸ்லியா கிட்டயும் ஷேர் பண்றான். ஒருத்தர்கிட்டயாச்சும் உண்மையா இருடா என்கிறார் இந்த நெட்டிசன்.
வேலையை பாருடா
டேய் டேய் போதும் டா வந்த வேலைய பாருடா என கவினுக்கு அட்வைஸ் செய்கிறார் இந்த நெட்டிசன்.
வெளியே அனுபுங்கய்யா
கொஞ்சம் போனா பிக்பாஸ் வீட்டு சுவத்துல வரைஞ்சுருக்க பெண் ஓவியத்தையும் கரெக்ட் பண்ணலாம்னு அதுக்கும் சாக்லெட் கொடுப்பான், சீக்கிரமே இவன வெளியே அனுப்புங்கய்யா என்று கூறுகிறார் இவர்.
செலக்ட் பண்ணுப்பா
ஏதாவது ஒன்னு மட்டும் செலக்ட் பண்ணுப்பா.. என கவினுக்கு அறிவுரை கூறுகிறார் இந்த நெட்டிசன்.
குழந்தைகள் பார்க்கிறார்கள்
காதலும் கன்றாவியும், சின்ன குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கு ஏற்றால் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தால் நன்று, கமல் சார் நீங்கள் இதை பற்றி வரும் வாரங்களில் பேசுங்கள்? என கோரிக்கை விடுக்கிறார் இந்த நெட்டிசன்.
வனிதா தொல்லையே மேல்
இவங்க பண்ணுற இந்த காதல் டார்ச்சருக்கு வனிதா பண்ண தொல்லையே மேல் டா சாமி என கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அது மட்டும்தான் பாக்கி
நீ இன்னும் சிம்பு என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் அனு சொல்லல. அது மட்டும் தான் பாக்கி.. என மகத்தை சீண்டுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











