இதை ஏன்யா அன்சீன்ல போடுறீங்க? பிரைம் டைம்ல போடுங்க.. ஆரிக்காக வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் ஆரிக்காக வரிந்து கட்டியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் ப்ரோமோவில் தன்னை பொறாமை பிடித்தவன் என்று ஹவுஸ்மேட்ஸ் சொன்னதை நிஷாவிடம் கூறி கண்கள் கலங்கினார் ஆரி.
இந்த ப்ரோமோ அன்சீனில் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள், இதை ஏன் அன்சீனில் போட்டீர்கள், ப்ரைம் டைமில் போடுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும் நாங்கள் இருக்கிறோம் ஆரி புரோ நீங்கள் கலங்காதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.
கோடி கைகள் தட்டும்..
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், மனசாட்சிக்கு உண்மையா இருப்பவர்களை மற்றவர்கள் கெட்டவர்களாகத்தான் நினைப்பார்கள்! பேச்சில் நடத்தையில் உண்மையில்லாமல் மக்கள் இவ்ளோ அன்பை அள்ளித்தரமாட்டார்கள்! உள்ளே வந்த கூட்டம் கைத்தட்டாது வெளியே வாங்க கோடி கைகள் தட்டும்! என்று கூறியுள்ளார்.
அலற வைப்போம்..
அன்சீன் ப்ரோமோவில் ஆரி அழுததை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி!.. உன்னை அழவைத்தவர்களை நாங்கள் அலறவைப்போம்! என கூறியுள்ளார்.
கொச்சைப்படுத்தும் கூட்டம்
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்கள் உண்மையான மனசையும்! உங்களை ஆதரிக்கும் எங்களையும்! கொச்சைப்படுத்தும் கூட்டம் உள்ளையும் வெளியேயும்! வெற்றி பெரிசாக இருக்கும்போது இந்த பேச்செல்லாம் தூசி மாதிரி என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
அடையாளம் கண்டோம்
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்ல மனச்சுக்காரன் நீ.. கொடூரர்களை நாங்கள் அடையாளம் கண்டோம்!.. உனக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம்.. என கூறியுள்ளார்.
எப்போதும் இருக்கிறோம்..
அன்சீன் ப்ரோமோவில் ஆரி அழுததை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ரம்யா எல்லாம் ஒரு ஆளா ஆரி புரோ?? கவலைப்படாதீங்க. நாங்கள் உங்களுக்காக எப்போதும் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
ஏன் அன்சீனில்?
இதை ஏன் அன்சீனில் போடுகிறீர்கள்? ஹேட்டர்ஸ் தெரிஞ்சுக்கட்டும் ஆரிக்கு அவங்க என்ன பண்ணியிருக்காங்கன்னு ப்ரைம் டைம்ல போடுங்க இதை என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
அன்கண்டிஷனல் லவ்
அன்சீன் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், கவலைப்படாதீங்க ஆரி அண்ணா.. நீங்கள் ஜெனியூன்.. அங்க இருக்குறவங்களுக்கு உங்க மேல பொறாமை.. ஆனா உங்களுக்கு இல்லன்னு எங்களுக்கு தெரியும்.. ஆனால் நாங்கள் அன்கண்டிஷனலாய் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
வலிகளையும் அனுபவிக்கிறோம்
ஆரி அழுததை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணா நீங்கள் உள்ளே அனுபவிக்கும் அத்தனை வலிகளையும் வெளியில் இருக்கும் உங்களை பெற்ரறடுக்காத கோடான கோடி பெற்றோர் கூடப் பிறக்காத கோடனா கோடி சகோதர சகோதரிகள் உங்களை முன் உதாரணமாக எடுத்து வாழ ஆசைப்படும் அத்தனை பேரும் வலிகளையும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











