எல்லாரையும் சிரிக்க வைச்ச புஷ்பாவோட வாழ்க்கையில இப்படியொரு சோகமா? சோகத்தில் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா கதறி அழும் காட்சியும் அதற்கான காரணமும் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரமோவில் நடிகை ரேஷ்மா கதறி அழும் காட்சி வெளியாகியுள்ளது. உங்கள் குடும்பத்தில் யாருடைய இழப்பு உங்களை மிகவும் பாதித்தது என ஃபாத்திமா பாபு ரேஷ்மாவிடம் கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் ரேஷ்மா தான் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது தனது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக கூறுகிறார். பூமியை பார்க்க சில நாட்கள் முன்னதாக தனது வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதை தனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று கூறி கதறினார் ரேஷ்மா.

குழந்தையின் கல்லறை
தனது குழந்தையின் கல்லறை அமெரிக்காவில் உள்ளது. அதற்காகத்தான் அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதாகவும் அவர் கூறினார்.

நெட்டிசன்களும் சோகம்
அவர் கலங்கியதை பார்த்து பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் கண்கலங்கினர். இந்நிலையில் நெட்டிசன்களும் ரேஷ்மாவின் வேதனையை கேட்டு சோகமடைந்துள்ளனர்.

கிண்டலடித்த நண்பர்கள்
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் இவர் நடித்த புஷ்பா கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படம் வெளிவந்த போது புஷ்பா புருஷன் யார் என கேட்டு கிண்டலடித்த நண்பர்களுக்குள் கேலி கிண்டல் என இருந்தது.

சமூக வலைதளங்களில் ஆதரவு
நகைச்சுவை கேரக்டரில் பலரை சிரிக்க வைத்த ரேஷ்மா வாழ்க்கையில் இப்படி ஒரு பெரிய சோகம் இருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து ரேஷ்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படியொரு சோகமா?
எல்லாரையும் சிரிக்க வைச்ச புஷ்பாவோட வாழ்க்கையில இப்படியொரு சோகமா?
ரேஷ்மாவுக்கு ஆதரவு
ரொம்ப கஷ்டம்.. ரேஷ்மா என கவலையை தெரிவிக்கிறார் இந்த நெட்டிசன்.
பழகுவதற்கு இனிமையானவர்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது புஷ்பா என்ற பெயர் இல்லாமல் ரேஷ்மா என்ற பெயருடன்தான் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ரேஷ்மா பழகுவதற்கு இனிமையானவர், திடமாக இரு பெண்ணே...
ஆன்மா சாந்தியடையட்டும்
அந்த வலி அவருக்கு மட்டும்தான் தெரியும்... குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்
ரொம்பவும் அழுத்துகிறது
இது மனதை ரொம்பவும் அழுத்துகிறது... என்கிறார் இந்த நெட்டிசன்
கடினமான விஷயம்
ரொம்பவே கடினமான விஷயம்... என்கிறார் இவர்
ஸ்டே ஸ்ட்ராங்
நாம் வெளியில் பார்க்கும் முகம் வேறு.. உள்ளே பார்க்கும் முகம் வேறு... ஆமாம்.. எனக்கு ரேஷ்மாவை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக உள்ளது.. உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.. ஸ்டே ஸ்ட்ராங்..


Click it and Unblock the Notifications











