அசுரன், பரியேறும் பெருமாளுக்கு ஒரு நியாயம்.. திரௌபதிக்கு ஒரு நியாயமா? வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: திரௌபதி படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி பேசியிருப்பதாக எழும் குற்றாசாட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
தமிழகம் முழுக்க பேசு பொருளாகி இருக்கிறது திரௌபதி திரைப்படம். தயாரிப்பாளர் என யாரும் இல்லாமல் கிரவும் ஃபன்டிங் முறையில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கிருக்கிறார். ஜூபின் இசையமைத்திருக்கிறார்.

நாடகக் காதல்
இந்தப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ், இளங்கோ, நிஷாந்த், கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரு சமூகங்களையும், நாடகக்காதல் உட்பட சாதிய பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளழ. இந்நிலையில் படம் குறித்து ஒரு சாரார் புகழ்ந்து பேசி வரும் நிலையில் ஒரு சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பரியேறும் பெருமாள்
இதனால் டிவிட்டரி ஒரு மோதலே வெடித்திருக்கிறது. திரௌபதி படத்தில் முழுக்க சாதியம் பேசப்பட்டிருக்கிறது என சில சாடியிருக்கின்றனர். இதனை பார்த்த திரௌபதி படத்தின் ஆதரவாளர்கள், பரியேறும் பெருமாள், அசுரன், கன்னிமாடம் ஆகிய படங்களை எடுத்துக்காட்டாய் கூறி வரிந்து கட்டியிருக்கின்றனர்.

ஏன் கொடி பிடிக்கிறீங்க?
அந்தப் படங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அடாவடி செய்திருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்தப் படங்களுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், இந்தப் படத்திற்கு மட்டும் கொடி தூக்குவது ஏன் என்றும் நெட்டிசன்கள் டிவிட்டரில் மோதி வருகின்றனர்.
இதுவும் உண்மைதான்
பரியேறும் பெருமாள், அசுரன் படங்கள்ல சொன்னது உண்மைன்னா, #திரெளபதி படத்துல சொன்னதும் உண்மைதான். பரியேறும் பெருமாள், அசுரன் படங்கள்ல சொன்னது பொய்யின்னா #திரெளபதி படத்துல சொன்னதும் பொய்தான்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
கன்னிமாடம் பற்றி பேசுவோம்
#திரெளபதி படத்தை எச்.ராஜா, ராமதாஸ் பாராட்டுகிறார்கள்
பிறகு எதற்கு அந்த படத்தை பார்த்து காசு, நேரத்தை வீணாக்க வேண்டும். சிலவற்றை கடந்து சென்றாலே கேட்பாரற்று கிடக்கும். #கன்னிமாடம் பற்றி பேசுவோம். என குறிப்பிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
டிவிட்டரில் ட்ரென்ட்டிங்
பரியேறும் பெருமாள் படத்துக்கு வாழ்த்து சொன்ன விஜய்....
#திரெளபதி படத்துக்கு சொன்னாரா?? ஒரு வேலை சொன்னாலும் சொல்லுவார் போல! என நடிகர் விஜயை வம்பிழுத்திருக்கிறார் இந்த நெட்டிசன். இதனிடையெ #திரெளபதி என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.


Click it and Unblock the Notifications











