அப்புறம் என்னப்பா அறிவிச்சிடலாமா.. குரூபிசம் முதல் இந்த வார எவிக்ஷன் வரை பறக்கும் பிக்பாஸ் மீம்ஸ்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தான் என்றும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த முக்கிய பிரச்சனைகள் குறித்தும் பங்கமாக கலாய்த்த மீம்கள் வைரலாகி வருகின்றன.

வாரத்துக்கு வாரம் கமல் சார் செம மாஸாகவும் கிளாசாகவும் மாறி வந்து பட்டையை கிளப்புகிறார். முதல் இரண்டு புரமோக்களும் வெளியாகி வரவேற்பை அள்ளி உள்ளன.

இந்த வாரம் நடந்த அழுகாச்சி சீரியல்களையும், அம்மா புள்ளை நாடகங்களையும் மீம் கிரியேட்டர்கள் கலாய்த்து தள்ளி உள்ளனர்.

எவனென்று நினைத்தாய்

எவனென்று நினைத்தாய்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சத்தமில்லாமல் எவனென்று நினைத்தாய் பட ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளுக்கு நாள் கமல் சாரின் நியூ லுக் அட்டகாசமாக மாறி வர அதுதான் காரணம் என்றும் கூறுகின்றனர். வாரத்தில் ஒரு நாள் பிக் பாஸ் ஷூட்டிங், மத்த நாளில் எவனென்று நினைத்தாய் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம்.

ஆரியும் அனிதாவும்

ஆரியும் அனிதாவும்

பிரிஸ்மா, டிரெண்ட்ஸ் என பரிசுகள் மற்ற போட்டியாளர்களுக்கு குவிந்து, அவர்கள் ஆடலும் பாடலும் என அட்டகாசம் செய்து வரும் நிலையில், ஆரியையும், அனிதாவையும் சிறைக்குள் தள்ளி விட்டு மற்ற போட்டியாளர்கள் கூத்தடிப்பதை வைத்து போடப்பட்ட சூர்யவம்சம் மீம் வைரலாகி வருகிறது.

நான் கம்மியாத் தான் பேசுனேன்

நான் கம்மியாத் தான் பேசுனேன்

சனம் ஷெட்டி, அனிதாவுக்கும் சம்யுக்தாவுக்கும் சண்டை உருவாகும் படி ஏத்தி விட்டு பேசும் போது, ரியோ பிரதரை விட நான் ரொம்ப கம்மியாத் தான் பேசுனேன் என அனிதா சொல்வதை கேட்ட நெட்டிசன்கள், இதுவே கம்மியா, அய்யோ காதுல எல்லாம் ரத்த ஆறு ஓடிச்சே என மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.

சனம்க்கு பவ் பவ்

சனம்க்கு பவ் பவ்

ஷிவானியை பாலாஜி முருகதாஸ் ரூட்டு விடுவதை பிடிக்காத சனம் ஷெட்டி, பாலாஜியை போரிங் போட்டியாளர் என நாமினேட் பண்ணும் போது, ஹவுஸ்மேட்களுடன் சேர்ந்து கொண்டு பிக் பாஸும் பாலாவை நீங்க நாமினேட் செய்ய முடியாதுன்னு சொன்னார். அப்போ நக்கல் புடிச்ச பாலா, சனமை பார்த்து பவ் பவ் காட்டினார். அதையும் மீமாக போட்டு அசத்தி உள்ளனர்.

பாசக்கார குடும்பம்

பாசக்கார குடும்பம்

உள்ளுக்குள்ள போட்டியை வச்சிக்கிட்டு, வெளியில அப்படியே பாசத்தைக் காட்டி நடிக்கிற பிக் பாஸ் போட்டியாளர்களை பார்த்த ரசிகர்களுக்கு இந்த முறை எந்த ஒரு போட்டியாளர் மீதும் ரொம்ப நல்ல அபிப்ராயமே இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்கா, தம்பி, தாத்தா, பேத்தி, அம்மா, பையன் என வேஷம் கட்டும் நாடக குரூப்பை நக்கல் அடித்துள்ளனர்.

என்ன அரசியல்

என்ன அரசியல்

சற்று முன் வெளியான பிக் பாஸ் புரமோவையும் நம்ம மீம் கிரியேட்டர்கள் சும்மா விடவில்லை. இந்த பாசத்துக்குள்ள ஒரு அரசியல் இருந்ததை பற்றி, இதுக்கெல்லாம் உள்ள ஒரு அரசியல் இருந்துச்சு கவனிச்சிங்களா என கமல் கேட்டதை வைத்து யாரை சொல்றாரு என்ன அரசியல் என்றும் கேட்டு வருகின்றனர். பிடிச்சவங்களுக்கு ஓட்டு போடாதீங்க, நல்லவங்களை கண்டு புடிச்சு ஓட்டுப் போடுங்க என்கிற பிரச்சாரம் தான்.

அப்புறம் என்னப்பா அறிவிச்சிடலாமா

அப்புறம் என்னப்பா அறிவிச்சிடலாமா

முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லை. இரண்டாவது வாரம் நடிகை ரேகா தான் எலிமினேட் ஆகிறார் என்பதை 3 நாட்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டனர். மூன்றாவது வாரம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை வைத்து ஆஜீத்தை காப்பாற்றி விட்டார்கள். இந்நிலையில், 4வது வாரத்தில் வெளியேற போவது வேல்முருகன் தான் என அப்புறம் என்னப்பா அறிவிச்சிடலாமா என்றும் மீம் போட்டு ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காங்க நெட்டிசன்கள். பெரிய ஸ்பீக்கர் அவுட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X