அம்மா பேய், பயமா இருக்கு: ஐஸ்வர்யா ராயை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Recommended Video
சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராயின் உடை மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடந்தார்.
ஐஸ்வர்யா தங்க நிற டிசைனர் கவுன் அணிந்து ஒய்யாரமாக நடந்தார்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராயின் உடையை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். இது என்ன பாம்பு மாதிரி உள்ளது, கையில் என்ன தவளை மோதிரமா என்று கேட்டுள்ளனர்.

கேன்ஸ்
ஐஸ்வர்யா ராய்க்கு அழகு உள்ளதே தவிர டிரஸ்ஸிங் சென்ஸ் இல்லை. சர்வதேச விழாவில் இப்படியா மோசமாக உடை அணிவது. நல்ல உடையை தேர்வு செய்திருந்தால் அவர் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்குமே என்கிறார்கள் ரசிகர்கள்.

ஆராத்யா
ஆராத்யாவுக்கு 7 வயதாகிவிட்டது. அவர் பிறந்ததில் இருந்து இன்று வரை அவரின் கையை இறுக்கி பிடித்துள்ளீர்களே. பாலிவுட்டில் நேற்று பிறந்த குழந்தைகள் எல்லாம் அம்மா கை பிடிக்காமல் நடக்கின்றன. ஆராத்யா பாவம், இனியாவது கையை விடுங்கள் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு உடை மட்டும் அல்ல மேக்கப்பும் சரியில்லை. பார்க்க ரொம்ப வயதானவர் போன்று தெரிகிறார். அவர் ஏன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை மாற்றாமல் உள்ளார் என்று சிலர் அக்கறையுடன் கேட்டுள்ளனர். ஐஸ்வர்யா அணிந்த உடைகளிலேயே இது தான் கேவலமானது. பார்க்கவே பயமாக உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











