For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வைரல் ஸ்டார் வனிதா... ஒரே ஃபோட்டோவால் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிட்டாரே

  |

  சென்னை : தமிழ் சினிமாவில் பொதுவாக மாஸ் ஹீரோக்கள், டாப் ஹீரோக்களுக்கு தான் இதுவரை சூப்பர் ஸ்டார், உலகநாயகன், சுப்ரீம் கோர்ட், மக்கள் நாயகன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், மக்கள் செல்வன் போன்ற பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயின்களில் நயன்தாராவிற்கு மட்டும் தான் லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

  ரசிகர்களால் பல்வேறு பட்டங்கள் கொடுத்து கொண்டாடப்பட்ட ஹீரோக்கள் அனைவரும் பல ஹிட் படங்களை கொடுத்து, ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற பிறகு தான் இப்படி பட்டங்கள் பெற்றனர். ஆனால் தற்போது வனிதா விஜயக்குமாருக்கு வைரல் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். அதுவும் ஒரே நாளில், ஒரே ஃபோட்டோவில் இந்த பட்டத்தை பெற்றுள்ளார் வனிதா.

  வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்! வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்!

  வனிதாவை விடாத மீடியாக்கள்

  வனிதாவை விடாத மீடியாக்கள்

  விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வனிதா விஜயக்குமார். தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பிறகு டிவி சீரியல்கள், டிவி ஷோக்களில் பங்கேற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களால் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டார்.

  பிக்பாஸில் பரபரப்பை கிளப்பிய வனிதா

  பிக்பாஸில் பரபரப்பை கிளப்பிய வனிதா

  இந்த பிரச்சனைகள் மெல்ல மெல்ல ஓய்ந்த பிறகு விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று, மீண்டும் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார் வனிதா. பிக்பாஸ் வீட்டிற்குள் தான் சண்டை போட்டு டிஆர்பி.,யை ஏற்றினார் என்றால், வீட்டிற்கு வெளியிலும் இரண்டாவது கணவர், வனிதா மீது போலீசில் புகார் அளித்தது போன்ற பிரச்சனைகளில் சிக்கினார். அதன் பிறகு குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று, வெற்றி பெற்றார்.

  இத்தனை படங்களில் நடிக்கிறாரா

  இத்தனை படங்களில் நடிக்கிறாரா

  அதற்கு பிறகு, மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் 4 மாதங்களில் விவாகரத்தில் முடிந்தது. பட வாய்ப்புக்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதால் தற்போது, பிரசாந்த்தின் அந்தகன் உட்பட கிட்டதட்ட 10 படங்களில் நடித்து வருகிறார் வனிதா.

  பவர்ஸ்டாருடன் திருமணமா

  பவர்ஸ்டாருடன் திருமணமா

  வனிதாவின் புது பட அறிவிப்புகள் ஒரு பக்கம் என்றால், மறு புறம் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட உரசலால் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றம் என தொடர்ந்து மீடியாக்களின் கவனத்தை தன் பக்கமே வைத்து வருகிறார் வனிதா. இதில் லேட்டஸ்ட்டாக பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை மாற்றி, தாலிகட்டிக் கொள்வது போன்ற ஃபோட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டார் வனிதா.

  பிரஸ்மீட்டிலும் தெறிக்க விட்ட வனிதா

  பிரஸ்மீட்டிலும் தெறிக்க விட்ட வனிதா

  அவர் வெளியிட்ட அடுத்த நிமிடமே இந்த ஃபோட்டோக்கள் தாறுமாறாக வைரலானது. வனிதா, பவர்ஸ்டாரை 4வதாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வேறு பரவியது. அதோடு நிற்காமல், இதற்கு விளக்கம் அளிக்க நடந்த பிரஸ்மீட்டிலும், 4 என்ன 40 திருமணம் கூட பண்ணுவேன். அது என் இஷ்டம் என பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டார் வனிதா.

  படத்திற்கு செம்ம விளம்பரம்

  படத்திற்கு செம்ம விளம்பரம்

  இப்படி வனிதா என்ன செய்தாலும் பரபரப்பாகி, வைரலாகி வருவதால் அவருக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டத்தை நெட்டிசன்கள் கொடுத்துள்ளனர். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் நடந்ததை போல் வனிதா வெளியிட்ட ஃபோட்டோக்கள், அவர் நடிக்கும் பிக்அப் டிராப் படத்திற்கு செம விளம்பரம் ஆகி விட்டது. பவர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதால் வனிதாவிற்கு வைரல் ஸ்டார் என பட்டம் கொடுத்து விட்டார்களா என்றும் தெரியவில்லை.

  English summary
  After Vanitha posted, changing garlands with powerstar srinivasan and pickup drop movie press meet netizens gave a title her as viral star vanitha. It gives big popularity to her new movie pickup drop.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X