Just In
- 10 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 10 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 24.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போதும் போதும் போர் அடிக்குது.. மூன்றாவது புரமோவை பார்த்து காண்டாகும் பிக் பாஸ் ரசிகர்கள்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவுக்கு பதிலாக இரண்டாவது புரமோ என போட்டுள்ள எடிட்டரையே பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும், மறுபடியும், சந்தோஷ தருணங்கள்ன்னு போட்டு ஏன் டா எங்க சந்தோஷத்தை கெடுக்கிறீங்க, இந்த கருமத்தைத் தானே 100 நாளா பார்த்து தொலைச்சோம்.
மாஸ்டர் சூப்பரா? சுமாரா? ட்விட்டரில் வைரலாகும் மாஸ்டர் பட மீம்கள்.. என்ன காரணம்?
கடைசி வாரத்துலயாவது ஏதாவது சுவாரஸ்யமா பண்ணுங்க என பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அழகான படம்
எவ்ளோ நேரம் வேணா பார்க்கலாம்.. என்ன அழகான படம்.. மூன்று பேருக்கு போட்டோஜினிக் ஃபேஸ் என ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வர்ணித்தும் அவர்களை வாழ்த்தியும் வருகின்றனர்.

நேர்மையா விளையாண்டா
நேர்மையா விளையாண்டா அதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.. என ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத்தின் தெறிக்கவிடலாமா சந்தோஷ தருண போட்டோவை ஷேர் செய்து இந்த பிக் பாஸ் ரசிகர் பாராட்டி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும், ஆரியின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

மக்கள் ரியாக்ஷன்
சந்தோஷ தருணங்கள் எல்லாத்துலயும் ஒரே கட்டிப்பிடித்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள், ரியோவை பார்த்து மக்கள் ரியாக்ஷன் என சிவா மனசுல சக்தி மீம் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

சம்யுக்தா டு பாலா
ஆரிக்கு ஓட்டுக்கள் ரொம்ப அதிகமாக இருக்குடா.. ஓட்டுக்கள் படி பார்த்தா அவரு தான் வின் பண்ணுவாரு என சம்யுக்தா, ரகசியமாக பாலாவுக்கு கொடுத்த டிப்ஸையும் பங்கமாக வச்சி கலாய்த்து வருகின்றனர். 5 லட்சம் பெட்டி வச்சா முதல் ஆளா பாலா எடுத்துட்டு ஓடிடுவாரு என்றும் கூறி வருகின்றனர்.

ரியோ எவிக்ஷன் வீடியோ
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், சந்தோஷ தருணங்கள் என சொல்லி விட்டு, மொத்தமும் ரியோவின் துதி பாடும் காட்சிகளாக இருந்ததை பார்த்த ரசிகர்கள், என்னடா ரியோவோட எவிக்ஷன் வீடியோவை லீக் பண்ணிட்டீங்க என பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், ரியோ பிளஸ் கோமாளியை சேர்த்து ரியோமாளி என புதுப் பெயரையும் வைத்துள்ளனர்.

நரி முகம்
நரி முகத்துல முழிச்சா நல்லது தான நடக்கும்.. நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டி, எவிக்ட் ஆகி வெளியே போன அன்னைக்கு உங்க முகத்துல தான் முழிச்சேன்.. இன்னைக்கு மறுபடியும் உள்ள வந்து முதல்ல உங்க முகத்தைத் தான் பார்க்குறேன் என ரம்யா பாண்டியனை நல்லாவே நக்கல் செய்துள்ளார்.

அர்ச்சனா செய்த மாயை
ரியோ ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, பாலாவை மாற்றி அர்ச்சனா கேம் சேஞ்சர் ஆன நாள் அது தான் என்றும், பாலா வெற்றி பாதையை தொலைத்த நாள் என்றும், அர்ச்சனா அழுது பாலாவை தனது அன்புக்கு அடிமை ஆக்கிய காட்சியை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

போர் அடிக்குது
போதும்.. போதும்.. ரொம்ப போர் அடிக்குது.. கிராண்ட் ஃபினாலே வாரத்துலயாவது கொஞ்சம் என்டர்டெயின்மென்ட்டா ஷோவை கொண்டு போங்க, இந்த மொக்கை கன்டெஸ்டன்ட்களை இத்தனை நாளா பார்த்ததே எங்க தலையெழுத்து, அடுத்த சீசனிலாவது நல்ல போட்டியாளர்களையும், அவங்களுக்கு நல்ல டாஸ்க்கையும் கொடுத்து பேர காப்பாத்திக்கோங்க என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.