ஆசை இல்லன்னா இத பண்ணும்மா.. தானா வெளியே அனுப்பிடுவாங்க! லாஸ்லியாவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது காதலரான கவின் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் லாஸ்லியா.
யாரிடமும் பேசாமல் என்னையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என பிக்பாஸிடம் கோரிக்கை விடுத்து வருகிறார் லாஸ்லியா. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அவருக்கு ஐடியா கொடுத்துள்ளனர்.
ஷெரின எலிமினேட் பண்ணனும்?
இப்போ என்ன ஷெரின எலிமினேட் பண்ணிட்டு லாஸ்லியாவ ஃபைனல் போக வைக்க போறீங்க அதானே.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
லாஸ்லியா டபுள் கேம்
எதுக்கு எப்போவும் டபுள் கேம் ஆடுற லாஸ்லியா. ஒரு முறையாது எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நில். உன் குடும்பத்துக்காக இருக்க விரும்பினால் விளையாட விருப்பம் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக விளையாடு. பிக்பாஸ் வீட்டில் இருக்க விருப்பம் இல்லாவிட்டால் ஃபைன கட்டிட்டு வெளிய வா, இல்லாட்டி பிக்பாஸ் வாய்ப்பு கொடுக்கும் வரை காத்திரு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சரியான சுயநலவாதி
எப்போதுமே லாஸ்லியாவுக்கு அவளுடைய ஃபீலிங்ஸ்தான் முக்கியம், சரியான சுயநலவாதி. நேத்து எல்லோரும் ஃபைனல்ஸ் போகனும் என்று கூறினாள், இன்று தனக்கு ஃபைனல்ஸ் போக விருப்பம் இல்லை என்று கூறுகிறார், என டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
முகத்திரை கிழிகிறது
ஆரம்பத்தில் எனக்கு லாஸ்லியாவை பிடித்தது. ஆனால் நாளுக்கு நாள் அவளுடைய முகத்திரை கிழிகிறது, அவளுடைய ஆட்டிட்யூடும், அரோகென்ஸ்தெரிகிறது. அவரது பெற்றோர் வந்து போன பிறகு மாறுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மாற்றமில்லை, அவள் பெற்றோரை பற்றி நினைத்திருந்தால் இப்படி ரியாக்ட் செய்திருக்க மாட்டாள். கோ டூ ஹெல் லாஸ்லியா என்று கூறிகிறார் இந்த நெட்டிசன்.
சுருட்ட முடிவு பண்ணிட்டாங்க
எனக்கென்னவோ லாஸ்லியாவும் கவினும் ப்ளான் பண்ணி இதை பண்ணமாதிரி இருக்கு. லாஸ்லியாவ அனுதாப ஓட்டு எடுக்கவச்சி மொத்த காசையும் ரெண்டு பேரும் சுருட்ட முடிவு பண்ணிட்டாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எப்பா முடியல...
எப்பா முடியல இந்த பச்சோந்தியோட டிராமா.. கவினுக்கு பதில் இவள் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.
எதுக்கு இந்த டிராமா
உங்கள கலாய்க்காம இதோட விட்டுடலாம்னு பாத்தா விட மாட்டீங்களே! பிக்பாஸ் கிட்ட ஓகே சொல்லிட்டு இப்ப எதுக்கு இந்த டிராமா? இந்த ஆட்டத்துல போறேன்னு சொல்றவங்கள தடுக்கவும் முடியாது! இருக்கிறேன்னு சொல்றவங்கள இருக்க வைக்கவும் முடியாது! இனி புரட்சியா எதாவது பண்ணா வெளிய போயிடலாம்! செய்வீர்களா என்று கேட்கிறார் இவர்.
நீச்சல் குளத்தில் குதி
உனக்கு ஆசை இல்லன்னா சுவர் ஏறி குதிச்சு வெளியே போக ட்ரை பண்ணு.. இல்லன்னா நீச்சல் குளத்தில் போய் குதி.. தானா வெளிய அனுப்பிடுவாங்க.. ஆனா ப்ளீஸ் அழாதம்மா பார்க்க முடியல என்கிறார் இந்த நெட்டிசன்.
தெறித்து ஓடுவது
கவினுக்கு தெரிந்ததுயெல்லாம் பெண்களை பார்ப்பது, பேசுவது! பேசுவது!! ஏசுவது! மனதை கலைப்பது! பிறகு தெறித்து ஓடுவது! ஓடுவது!! மட்டுமே!
கவலையில்லை
தர்ஷன் முகின் சாண்டி மூனு பேர்ல யார் வேணா ஜெயிக்கட்டும்.
தர்ஷன் முகின் டாஸ்க்வைஸ் செம பர்ஃபாமன்ஸ் முழு சீசன்.
தர்ஷன் ஜெயிச்சா சந்தோஷம் முகின் ஜெயிச்சாலும் கவலையில்ல என்கிறார் இவர்.
மார்க் மை வோர்டுஸ்
இவனுங்க லாஸ்லியாவ வின் பண்ண வைக்க போறாங்களாம், அடேய் காமெடி பண்ணாதீங்கடா கக்கூஸ் பேன்ஸ்..முகென்தான் பிக்பாஸ்3 டைட்டில் வின்னர் என்னுடைய வார்த்தையை மார்க் பண்ணி வச்சுக்குங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
தாங்க முடியல குருநாதா
லாஸ்லியா ஓவர் நடிப்பு....தாங்க முடியல குருநாதா!!! என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











