பாலா மாமாவ நினைச்சுகிட்டே ஷாப்பிங்.. ஷிவானி டீமுக்குத் தான் பூஜ்ஜியம்.. கன்ஃபார்மே பண்ணிட்டாங்க!
சென்னை: ஜித்தன் ரமேஷ், ஷிவானி மற்றும் ஆஜீத் டீம் மணிக்கூண்டு டாஸ்க்கில் 2ம் இடம் வந்ததே பலருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
Recommended Video
மூன்றாவது புரமோவை பார்த்து முடித்ததும், அந்த டீமுக்கு கிடைத்த லக்சரி பட்ஜெட் பூஜ்ஜியம் ஆகி விட்டது என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் பலர், பிக் பாஸ் எடிட்டரை முதல் முறையாக குழப்பமான புரமோவுக்காக பாராட்டி வருகின்றனர்.

ஷிவானி தான் டார்கெட்
பிக் பாஸ் ரசிகர்களின் தற்போதைய டார்கெட்டே ஷிவானி நாராயணன் தான். ஷிவானி பிக் பாஸ் வீட்டில் செய்யும் விஷயங்களையும், அவர் பாலாவுடன் பண்ணும் ரொமான்ஸ் சேட்டைகளையும் வைத்து ஏகப்பட்ட மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ட்ரோல்களும் இஷ்டத்துக்கு குவிந்து வருகின்றன.

ஷிவானிக்கு இதுதான் பொழப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாட வந்த ஷிவானி, முழு நேரமும் பயில்வான் பாலாஜி முருகதாஸை என்டர்டெயின் பண்ணுவதை மட்டுமே வேலையாக கொண்டு இருக்கிறார் என ரம்யா பாண்டியன் சம்யுக்தாவிடம் ஷிவானி மாதிரியே நடித்து காட்டி சொன்னதை பார்த்த ரசிகர்கள், அப்படியே நம்ம மனசுல இருக்கிறத சொல்றாங்க பா என மீம் போட்டு ஷிவானியை ஓட்டி வருகின்றனர்.

இந்த டீமா
ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத், இதுவரை மிக்சர் தின்னிகள் என பெயர் எடுத்து வந்த இந்த மூன்று பேரையும் ஒரு டீமில் போடும் போது ஏகப்பட்ட பேர் கலாய்த்தனர். ஆனால், இரண்டாவது இடம் பிடித்து உள்ளனர் என என்றதுமே குழம்பிய ரசிகர்கள், தற்போது இந்த டீம் தான் லக்சரி பட்ஜெட்டை முழுசாக இழந்திருக்கும் என அடித்து சொல்லி வருகின்றனர்.

ஷிவானி என்ன பண்ணா?
படுக்கை அறையில் ஆஜீத், ரம்யா பாண்டியனிடம், எனக்கு தெரிஞ்சு இந்த வாரம் போரிங் போட்டியாளர்னா அது சுச்சி மற்றும் ஷிவானி தான் எனக் கூற, ஷிவானி என்ன பண்ணா? என சம்யுக்தா சப்போர்ட்டுக்கு வர.. ரம்யா பாண்டியன், அதைத் தான் நானும் கேக்கிறேன் ஷிவானி என்ன டாஸ்க் பண்ணா? என கலாய்க்கும் மீம் வேற லெவல்.

மோசடி செய்யும் பிக் பாஸ்
யோவ் பிக்பாசு லக்சரி பட்ஜெட் கட்னு சொல்றீங்க.. ஆனா சைடு ரூம்ல இருந்து சுண்டல். டீ காபி, அப்புறம் தட்டுல நிறைய வருதே அது என்னவாம்? என சரியான சாட்டை அடி கேள்வியை கேட்டு இருக்கிறார் இந்த ரசிகர். லக்சரி பட்ஜெட் டாஸ்க், சிலிண்டருக்கு மீட்டர், தண்ணிக்கு மீட்டர் எல்லாம் வெறும் பீலா என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தயவு செஞ்சு கிளம்பு
என்ன டாஸ்க் நடக்குதுன்னு தெரியாமல், அதில் பங்கேற்காமல், படுத்துத் தூங்கிட்டு மத்தவங்களை கலாய்க்கும் சுச்சியை பார்த்தாலே இரிடேட் ஆகுது என்றும், பிக் பாஸ் வீட்டை விட்டு தான் போக மாட்டேன்னு அடம்பிடிக்கும் சுச்சியிடம் முதல்ல தயவு செஞ்சு கிளம்பு, தினமும் உன் ஓணான் மூஞ்சியை பார்க்க சகிக்கல என திட்டித் தீர்க்கின்றனர்.

பாலா மாமாவ நினைச்சுகிட்டே ஷாப்பிங்
ஆரி, ரியோ மற்றும் கேபி டீமுக்கு மதிப்பெண் குறைந்திருக்காது என்றும், பாலா மாமாவை நினைச்சுகிட்டே ஷாப்பிங் பண்ண ஷிவானியால தான் அந்த டீமுக்கு பூஜ்ஜியம் பாயிண்ட்ஸ் கிடைத்திருக்கும் என்றும், பாலாவுக்கு அடுத்து ஷிவானி டீம் தான் கடைசி என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஷிவானியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











