கொஞ்ச நஞ்ச பாடா படுத்துனாங்க ஆரிய.. வச்சு செய்யுங்க கமல் சார்.. செம்ம காண்டில் நெட்டிசன்ஸ்!
சென்னை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஜாலியாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நிஷாவை வறுத்தெடுத்துள்ளார் கமல். அர்ச்சனாவின் அப்பா மரணம் குறித்து டாஸ்க்கில் பேசிய விவகாரம் குறித்து பேசும் கமல் அவரை வச்சு செய்துள்ளார்.
நிஷாவை ஆசிட் என்றும் விளாசியுள்ளார் கமல். ஒரு டீமாக இருந்து அர்ச்சனா, நிஷா மற்றும் ரியோ ஆகியோர் மற்ற ஹவுஸ்மேட்ஸை விரட்டினர். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் ஹேப்பியாகிவிட்டனர்.

ஏத்திவிட்டு ஆடவிடனும்..
புரமோவில் கமல் நிஷாவை விளாசுவதை பார்த்த இந்த நெட்டிசன் நீங்க விளாச வேண்டியது ரியோவை! நிஷா பண்ணது தப்புனு தான் எல்லாரும் சொல்லிட்டாங்களே! உங்க ஸ்ட்ரேட்டர்ஜி அர்ச்சனாவ கேள்வியே கேட்காம ஏத்திவிட்டு ஆடவிடனும் என பதிவிட்டுள்ளார்.

மக்கள் ஆர்வம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த லவ்வு பெட்டு கேங்கை வெளியே அனுப்புறதுல மக்கள் என்னுமோ இவ்வளவு ஆர்வமா இருக்காங்களே! என பதிவிட்டுள்ளார்.

பாடாபடுத்துனீங்க..
இரண்டாவது புரமோவில் கமல் நிஷாவை வெளுப்பதை பார்த்த இந்த நெட்டிசன், கொஞ்ச நஞ்ச பாடா படுத்துனாங்க ஆரிய என்று கேட்டு சந்தோஷப்பட்டுள்ளார்.

தனியா உட்கார்ந்து இருப்பாங்க
புரமோவில் அர்ச்சனா தனியாய் அமர்ந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன் கூடி கூடி பேசுவாங்களாம்! கூட்டுப்போய் தலைய தடவி போதிப்பாங்களாம! சனிக்கிழமை மட்டும் கூடாமல் தனியா உட்கார்ந்து இருப்பாங்க? அவங்க யாரு?
60 கேமரா வாரம் பூரா தூங்குதாம்மா அர்ச்சனா என கேட்டு கிழித்து விட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இன்னைக்கு யாருக்கு பாயாசம்?
இந்த வாட்டி டபுள் எவிக்ஷன். இன்னைக்கு போறது நிஷா
இல்ல சோமு என்றால்.. மக்கள் உங்கள் கையில்!!!!
இன்னைக்கு யாருக்கு பாயாசம்!!!? என் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அதான் காரணமா?
புரமோவில் நிஷாவை கமல் வறுத்தெடுப்பதை பார்த்த இந்த நெட்டிசன் அப்ப நிஷா வெளிய போறது அர்ச்சனாவ வறுத்ததால தான். குறைவா ஓட்டு வாங்கினதால இல்ல அப்படித்தான?? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாக்கு நிஷா பேசுனது பிராப்ளம் இல்ல ஆண்டவரே.. அவங்க அவுட் ஆகிட்டாங்கன்னு தெரிஞ்சதும்தான் மேடத்திற்கு தாங்கமுடியல. நீங்க அவங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கேவலமான செயல்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மிக பிரபல வாசகம்:
அர்ஜுன் அம்மா யாரு... இன்றைய தினம் அனைவரும் சொல்லும் ஒரு வாசகம்: அர்ச்சனாவை எப்போது வெளியேற்றுவார்கள்...அவருடைய கேவலமான செயல்களால் அடுத்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி வரும்.. என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











