'அந்த' ரணகளத்தன்று விஷால் சொன்னது டிடிவியை பத்தி தானா?
சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் விஷால் பற்றிய முக்கிய சந்தேகம் தீர்ந்துவிட்டதாக நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்காக நல்லது செய்யப் போகிறேன் என்று கூறி நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
விஷாலும் என்னென்னவோ செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.

ஆதரவு
என் வேட்புமனு தள்ளுபடியானால் என்ன அதற்காக நான் ஓய்ந்துவிட மாட்டேன். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரு சுயேட்சைக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று வீரமாக பேசினார் விஷால்.

வெற்றி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து கூறியதுடன் தனது முழு ஆதரவையும் தெரிவித்தள்ளார் விஷால்.
புரிந்துவிட்டது
அப்போ நீங்க ஆதரிப்பேன்னு சொன்ன சுயேச்சை இது தானா?

தெரிந்துவிட்டது
விஷால் திடீர் என்று தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னால் டிடிவி தினகரன் இருப்பதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை பார்த்தவர்கள் உண்மையாகவே நீங்க அவர் ஆளுதானா என்று கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











