மீ டூ இருக்கட்டும், நம்ம ராஜலட்சுமிக்கு நியாயம் கேட்க மாட்டீங்களா சின்மயி? #JusticeForRajalakshmi
சென்னை: ராஜலட்சுமிக்கு நியாயம் கேட்க மாட்டீர்களா என்று நெட்டிசன்கள் பாடகி சின்மயியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மீ டூ விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் ட்வீட்டி வருகிறார்கள். ஆனால் ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி ராஜலட்சுமி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து பலரும் வாய் திறக்கவில்லை.
மீ டூ என்றால் ஊருக்கு முந்தி வந்து பேசும் பிரபலங்கள் ராஜலட்சுமி பற்றி மட்டும் பேசாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சித்தார்த்
13 வயது ராஜலட்சுமி தனது தாயின் கண் முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து ட்வீட்டியதுடன் அதற்கு நியாயம் கேட்டுள்ளார் சித்தார்த். உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதால் நடக்கும் கொடூரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் அவர். #JusticeForRajalakshmi
ராஜலட்சுமி
மீ டூ பற்றி பேசிய சின்மயி ராஜலட்சுமி குறித்து அமைதியாக இருப்பது பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போதும்
சாதி, சமூகத்தின் அடிப்படையில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை செய்ய யார் அவர்களை ஊக்குவிக்கிறார்கள்?அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை இதை அனுமதிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.
அசோக் செல்வன்
ராஜலட்சுமியின் விவகாரம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள நடிகர் அசோக் செல்வன் இது குறித்து மீடியாக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JusticeforRajalakshmi


Click it and Unblock the Notifications











