விஜய் சேதுபதி இதமாத்திக்கிட்டா நல்லா இருக்கும்.. கோரிக்கை வைக்கும் இணையவாசிகள்!

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அனைவரும் கொண்டாடும் நடிகராக இருக்கிறார். அவரின் எதார்த்தமான பேச்சும் அவரின் இயல்பான குணமும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. அதுவும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு அவரின் ரசிகர்களின் கூட்டம் ஏகத்திற்கும் விரிவு அடைந்து இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கு. இந்த நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சில கமிட்மென்ட் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற ப்ரோமோ வெளியாகி விஜய்சேது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதியானது.

bigg boss tamil season 8 vijay tv vijay sethupathi 8

பிக் பாஸ் விஜய்சேதுபதி: விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் எப்படி தொகுத்து வழங்குவார். அப்பேர்பட்ட கமலை இணையவாசிகள் ட்ரோல் செய்து தெறிக்கவிட்டார்களே, விஜய் சேதுபதியின் குணத்திற்கு இதுசெட் ஆகுமா என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவிலேயே மனுஷன் தெறிக்கவிட்டுவிட்டார். குறிப்பாக ரஞ்சித்தின் நண்பர் சாப்டீங்களா, எங்க ஊரில் யாரைப்பார்த்தாலும் அப்படித்தான் கேட்போம் என்று சொல்ல, விஜய் சேதுபதி சற்று கடுப்பானாலும், உங்க ஊர்ல மட்டுமில்ல, எந்த ஊராக இருந்தாலும் முதலில் சாப்டீங்களா என்று தான் கேட்போம் என்று நோஸ் கட் கொடுத்தார்.

முகத்தை சுளிக்கிறார்: இதனால், முதல் எபிசோடிலேயே ரசிகர்கள் விஜய் சேதுபதியை இணையத்தில் கொண்டாடினார்கள். ஒரு சில இணையவாசிகள் இவரை கொண்டாடினாலும், விஜய் சேதுபதி சில விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், போட்டியாளர்களிடம் நேரா விஷயத்திற்கு வாங்க என்று அவர்களை கட்டாயப்படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல், சுத்தி சுத்திவிடாதீங்க என்று சொல்லுவது, முகத்தை சுளிப்பது, கிண்டல் அடிப்பது போன்ற வேலைகளை செய்கிறார்.

இணையவாசிகள் கருத்து: இது அர்னவ் விஷயத்திலும் நடந்ததது, அர்னவ் எலிமினேட் ஆகி வெளியே வந்ததும். வீட்டுக்குள்ள இருப்பவர்களிடம் என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க என்று சொன்னார். இதனால் தான், அர்வன் அவர்கள் மீது இருந்த கோவத்தை வெளிப்படுத்தினார். அப்போது விஜய்சேதுபதி குறுக்கிட்டு வன்மத்தை கக்கும் இடம் இது இல்லை என்றார். அர்னவை ஏற்றிவிட்டதே, அவர் தான், மேலும் அர்னவ் பேசும் போது, விஜய் சேதுபதி யாருடா இவன் என்பது போல சில சைகைகளையும் செய்தார். இது போன்ற செயல்கள் போட்டியாளர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும் எனவே இது போன்ற செயல்களை விஜய்சேதுபதி மாற்றிக்கொண்டால் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X