தாய்க்கிழவி சிரிக்காத ஆத்தா.. பயமா இருக்கு.. ரம்யா பாண்டியனை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில் கமல் ரம்யா பாண்டியனை ரோஸ்ட் செய்ததை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு பிக் பாஸ் ரசிகர்கள் புரமோவுக்கு கொடுத்துள்ள ரியாக்ஷன்கள் எல்லாம் சமூக வலைதளத்தை தெறிக்கவிடுகின்றன.
சிரித்து மழுப்பும் ரம்யா பாண்டியனை சீக்கிரமே அழ வைக்க பிக் பாஸ் வெறி கொண்டு காய்களை நகர்த்துவதாகவே தெரிகிறது.

நாங்க இருக்கோம்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் வெளியேறப் போகிறார் என்கிற தகவல் வழக்கம் போல சனிக்கிழமையே கசிந்து விட்டது. இந்நிலையில், இன்றைய மூன்றாவது புரமோவிலும் அர்ச்சனாவின் எவிக்ஷன் குறித்த ட்ரோல் மீம்கள் வைரலாகி வருகின்றன. வெளியேறும் அர்ச்சனாவுக்கு நாங்க இருக்கோம் என அன்பு குடும்பத்தினர்களான ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் வேல்முருகன் சொல்வது போன்ற மீம் வைரலாகி வருகிறது.

சிரிக்கவே மாட்ட
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா இருந்தவரை அவரை டம்மி மம்மி என ட்ரோல் செய்து வந்த பிக் பாஸ் ரசிகர்கள், இப்போ லேட்டஸ்ட்டா ரம்யா பாண்டியனை டம்மி ரம்மி என இஷ்டத்துக்கு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். சில ரசிகர்கள் எல்லை மீறியும் ரம்யாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அப்படி சீன் போடும்போதே
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா எலிமினேட் ஆகியுள்ள நிலையில், கேப்டன் டாஸ்க்ல ஜெயிச்சுட்டு அவ்ளோ ஆக்ரோஷமா.. அப்பாடா அடுத்த வாரமும் நாம சேவ்ன்னு நினைச்சி சீன் போடும் போதே இப்படி ஏதாவது பல்பு வாங்குவீங்க அர்ச்சனான்னு நினைச்சோம் என எஸ்.எம்.எஸ். மீமை போட்டு கலாய்த்துள்ளனர்.

கமல் மொதல்ல பார்க்கிறாரா
கமல்: முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.. Viewers: முதல்ல இவரு (கமல்) பார்க்குறாரோ தெரியல.. சைடு கேப்பில் கமலையும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் மரணமாக கலாய்த்துள்ளனர். அவருக்கு விக்ரம் பட ஷூட்டிங், அரசியல்னு ஆயிரம் வேலை இருக்கு.. பிக் பாஸ் பார்த்துட்டு வெட்டியா கமெண்ட் அடிக்க மாட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

பாயாச ஆயா
அனிதா மைன்ட் வாய்ஸ்.. "அர்ச்சனா அக்கா வெளியே போயிட்டாங்க.... ஆனால், ஆஜித் எப்படி இன்னமும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறான்?!?!" என அனிதாவை ஒட்டுமொத்தமாகவே பாயாச ஆயாவாக ரசிகர்கள் பார்த்து வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர்.

இது முன்னே.. அது பின்னே
ஆத்தா.. தாய்க்கிழவி அப்படி சிரிக்காத ஆத்தா என்றும், இது செருப்படிக்கு முன்னே.. அது செருப்படிக்கு பின்னே என மூன்றாவது புரமோவில் கமல் வறுத்த நிலையில், ரம்யாவை பிக் பாஸ் ரசிகர்களும் தரமா உப்பு, மஞ்சள், மிளகாய் தூள் எல்லாம் போட்டு எண்ணெய்யில் வாட்டி வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











