அனிதா எஸ்கேப் ஆகலாமுன்னு மொத்த பழியையும் மொட்டை மேல போட பாக்குது.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செய்தி வாசிப்பாளர் அனிதாவை வச்சு செய்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய மூன்றாவது புரமோவில் தான் செய்த தவறை உணர்ந்த அனிதா கேமரா முன்பு நின்று புலம்பியுள்ளார்.
தன்னுடைய தவறால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற பயம் அனிதாவுக்கு வந்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

மரியாதை கொடுக்காமல்
இதனால் தன் மீதான பழியை நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி மீது சுமத்த பார்ப்பதும் மூன்றாவது பிரமோவில் அப்பட்டமாக தெரிகிறது. அதோடு புரமோவில் ஒரு சில இடங்களில் சுரேஷ் சக்கரவர்த்தியை நீ, போ என்றும் வயதுக்கு கூட மரியாதைக் கொடுக்காமல் பேசுகிறார் அனிதா.

மரியாதை கொடுமா
அனிதா சம்பத் மரியாதை இல்லாமல் பேசுவதை கவனித்த இந்த நெட்டிசன் அவர் பேசியதை குறிப்பிட்டு அறிவுரை கூறியுள்ளார்.
என்னது?? "நீ" நியூஸ் ரீடர்னு சொல்லலயா! யம்மா.. அனிதா பொது இடத்தில வயசுக்கு மரியாதை கொடுமா! என்று கூறியுள்ளார்.

பிரேக்கிங் நியூஸ்
சுரேஷ் புரமோவில் வர வேண்டும் என்று ஆசைப்படுவதாக அனிதா கூறியதை கேட்ட இந்த நெட்டிசன், பிரேக்கிங் நியூஸில் இருக்க விரும்புவது அனிதாதான். அதனால்தான் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிதாக்குகிறார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மொட்ட மேல போட பாக்குது
அனிதா சம்பத் புலம்புவதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா நல்லா மாட்டிக்கிச்சு, எஸ்கேப் ஆகலாம்முன்னு ஃபுல் பிளேமையும் மொட்ட மேல தூக்கி போட பாக்குது.. ஆனா மொட்டை மாம்சு இப்போதைக்கு.. என ஒரு குழந்தை நக்கலாக கால் மேல் கால் போட்டு வேடிக்கை பார்க்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இவ்ளோ பெரிய கலவரமா?
அனிதா சம்பத்தின் பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தெரியாத்தனமா ஒரு செய்தியை வாசித்துவிட்டேன் அதற்கு இவ்வளவு பெரிய கலவரமாடா! மக்களே என்னை காப்பாத்துங்க.. என கதறுவதாக கிண்டலடித்துள்ளார்.

குறும்படம் கேட்ட
அனிதா சம்பத் எல்லாமே அவரை பற்றிதான் இந்த புரமோவில் பேசுகிறார். அவர்தான் கேமரா கவனத்தை விரும்பும் நபராக உள்ளார். நீதாம்மா முதல்ல குறும்படம் கேட்ட.. அடுத்த நாள் காலையில் இந்த பிரச்சனையை கிளப்பியது நீதான்.. சுரேஷ் சக்கரவர்த்தியை குறை சொல்லாதே என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சந்தி சிரிக்க வச்சிட்டீங்களேடா..
அனிதாவின் சூழ்நிலையை பார்த்த இந்த நெட்டிசன், சிரிக்கவைக்கலாம்னு ஒரு செய்தியை வாசிச்சா இப்படி சந்தி சிரிக்க வச்சடீங்களேடா.. என கிண்டலத்துள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், ஆள பார்த்தா அப்பாவி போல் இருந்தாலும் இவ்ளோ பெரிய வேலையை பார்த்துடுச்சே என அதிர்ச்சியடைந்துள்ளார்.

அழவச்சியிருக்கோம்
அனிதா தற்போது புலம்புவதை பார்த்த இந்த நெட்டிசன், யோவ்! நாங்கயெல்லாம் செய்திசொல்லியே பலபேரை அழவச்சியிருக்கோம்.. என அனிதா சம்பத்தை கிண்டலடித்துள்ளார்.

அனிதாவுக்குதான் அந்த ஆசை
நேத்து ஷிவானி சொன்னது.. யாரு கேம் ப்ளான் பண்றாங்களோ.. அவங்கதான் மத்தவங்கள கேம் பிளான் பண்றாங்கன்னு சொல்வாங்க.. அதேதான் இங்கே.. யாரு புரமோல வரணும்னு நினைக்கிறாங்களோ அவங்கதான் மத்தவங்க அப்படி பண்றாங்கன்னு சொல்றது என அனிதாவின் நோக்கத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











