ரீல் அந்து போய் ரொம்ப நேரமாச்சு: நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: அவதார் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று கூறிய பாலிவுட் நடிகர் கோவிந்தாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று பாலிவுட் நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளார். மேலும் கேமரூனுக்கு அவதார் என்கிற தலைப்பை பரிந்துரை செய்ததே நான் தான் என்றும் கோவிந்தா கூறியுள்ளார்.

கோவிந்தா தெரிவித்ததை பார்த்த நெட்டிசன்களோ இது எல்லாம் நம்பும்படியாகவே இல்லையே என்கிறார்கள். மேலும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கோவிந்தாவை கலாய்க்கிறார்கள்.

கோவிந்தா

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் என்று கோவிந்தாவை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். அவதார் பட ஹீரோ ரோல் கோவிந்தாவுக்கு கொடுக்கப்பட்டது என்றால் ஷோலே பட ஹீரோ வாய்ப்பு என் அப்பாவுக்கு கிடைத்தது. ஆனால் அவருக்கு தர்மேந்திராவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லாததால் அதை ஏற்கவில்லை என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார். #Govinda #jhootmatbolo

அயர்ன்மேன்

அவதார் படத்தில் நடிக்க அழைத்தார்கள் என்று கோவிந்தா தெரிவித்துள்ளார். அயர்ன் மேனாக நடிக்க என்னை அழைத்தார்கள் ஆனால் நான் தான் மறுத்துவிட்டேன் என்று நெட்டிசன்கள் மரணமாக கலாய்க்கிறார்கள்.

உதவி

அவதார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் ஜேம்ஸ் கேமரூனுக்கு அவதார் தலைப்பை பரிந்துரை செய்தேன் என்று கோவிந்தா தெரிவித்துள்ளார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தவர். அதனால் பாலிவுட்காரர்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார் விமர்சகர் கே.ஆர்.கே.

கலாய்

உடல் முழுவதும் பெயிண்ட் அடிக்க பிடிக்காததால் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கோவிந்தா தெரிவித்துள்ளார். முத்தக் காட்சியால் கிளாடியேட்டர் படத்தில் நடிக்க மறுத்தேன் என்று ராக்கி சாவந்த் கூறியது தான் நினைவுக்கு வருகிறது என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X