பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்றாரா பா. ரஞ்சித்?: நெட்டிசன்கள் செம கலாய்
சென்னை: பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்று இயக்குனர் பா. ரஞ்சித் கூறியதாக அவரை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாகுபலி 2 படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி படத்தை எடுத்த இயக்குனர் பா. ரஞ்சித் பாகுபலி 2 படத்தில் சமுதாயத்திற்கு உதவும் கருத்து எதுவும் இல்லை என்று கூறியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெட்டிசன்கள் ரஞ்சித்தை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கபாலி
பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை -பா.ரஞ்சித்
மெட்ராஸ்,கபாலி படங்கள்ல அண்ணன் சமுதாய கருத்த வாரி எறைச்சி இருப்பார் 😝😝😂
ரஞ்சித்
பா.ரஞ்சித் பாகுபலி எடுத்துருந்தா கட்டப்பாவை வச்சு உரிமை புரட்சி பண்ணி சமூக நீதி வென்றதுனு கட்டப்பாவை அரசனாக்கி படத்தை முடிச்சிருப்பான்ல..😂
பாகுபலி 2
நீயெல்லாம் கருத்து சொல்ற 😂😆
பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை - பா. ரஞ்சித்
நீ எடுத்த கபாலி படத்துல கதையே இல்லையாம் சும்மா போவியா அங்கிட்டு

இல்லை
பாகுபலி 2 படத்தை பற்றி நான் எந்த தவறான கருத்தும் தெரிவிக்கவில்லை. படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்துள்ளது என்று இயக்குனர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











