இப்படியே பேசிக்கிட்டிருந்தா ஜென்மத்திற்கும் கல்யாணம் நடக்காது பிரேம்ஜி!
சென்னை: பிரேம்ஜி இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நிச்சயம் உங்களுக்கு திருமணமே நடக்காது என்று நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்கிறார்கள்.
38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரேம்ஜி அமரன். பய பக்தி உள்ள குடும்ப பெண்ணாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிரேம்ஜி.
கோவிலும், வீடுமாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாராம் பிரேம்ஜி. இதை நாங்க சொல்லவில்லை அவரின் அப்பா கங்கை அமரன் தான் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மீம்ஸ்
ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம் குறித்த மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி அமரன்.
சிங்கிள்
கடைசிவரை நீங்க என்றென்றும் பேச்சுலர் தான் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
கடைசி
உங்களுக்கு கடைசிவரைக்கும் டிபன் தான் 😂 என ஒருவர் கலாய்த்துள்ளார்.
குடி
எப்போ தான் கல்யாணம் பண்றதா இருக்கீங்க... குடிச்சா உங்க கல்யாணத்துல தான் குடிக்கணும்னு இருக்கன் என இப்படியும் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

பார்த்தா தெரியலையே
தனக்கு வரப் போகும் மனைவி மஞ்சள் குங்குமத்துடன் மகாலட்சுமி மாதிரி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் பிரேம்ஜி. இவ்ளோ கேட்கும் நீங்கள் அவ்வளவு நல்லவரா?. பார்த்தால் தெரியலையே என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











