சுட்டுட்டாங்க, ஹாலிவுட்டில் இருந்து சுட்டுட்டாங்க: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து சிரிக்கும் ஃபேன்ஸ்
ஹைதராபாத்: பிரபாஸின் சாஹோ ஃபர்ஸ்ட் லுக் ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாஸின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

காப்பி
ஹாலிவுட் படமான பிளேட் ரன்னர் 2049ல் ரயன் கோஸ்லிங் இருக்கும் போஸ்டரை காப்பியடித்து சாஹோ போஸ்டரை வெளியிட்டுள்ளனர் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
போஸ்டர்
பிளேட் ரன்னரின் புகைப்படத்தை வெளியிட்டு சாஹோ குழுவை கலாய்க்கிறார்கள்.
ஷேம்
சாஹோ ஃபர்ஸ்ட் லுக் ஹாலிவுட் படத்தின் காப்பி. ஷேம் ஷேம்...
வெட்கம்
சாஹோ ஃபர்ஸ்ட் லுக் ஏன் பிளேட் ரன்னர் போன்று உள்ளது? வெட்கம் இல்லாமல் காப்பியடித்துள்ளது சாஹோ குழு
Comments


Click it and Unblock the Notifications