அய்யே.. பட்டியாலா.. என்ன புரோ கேர்ள்ஸ் பேண்ட்லாம் போட்றீங்க... இளம் ஹீரோவை பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: வித்யாசமான டிரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகர் ஹரீஷ் கல்யாணை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Mahat reduced his salary | Simbhu Friends on Board, Mahat, Harrish Kalyan

நடிகர் ஹரீஷ் கல்யாண் 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தாமாமா, பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஹரீஷ் கல்யாண். இவர் பல படங்களில் நடித்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவருக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது.

தாராள பிரபு ஹிட்

தாராள பிரபு ஹிட்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் பெரும் ஹிட்டானது.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது கசட தபற மற்றும் தெலுங்கு ரீமேக் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண் அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

செம ஹேண்ட்ஸம்

செம ஹேண்ட்ஸம்

அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவுமே அதிகளவு ஷேர் செய்யப்படுவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண், செம கெத்தாய் ஒரு போட்டோ ஷேர் செய்துள்ளார். அதில் நீல நிற பனியன், வெள்ளை நிற பேண்ட், கூலிங் கிளாஸ் என செம ஹேண்ட்ஸமாக உள்ளார்.

பட்டியாலா பேண்ட்

பட்டியாலா பேண்ட்

ஆனாலும் அவரை பங்கம் செய்துள்ளனர் நெட்டிசன்கள். காரணம், அவர் அணிந்திருக்கும் பேண்ட். பட்டியாலா மாடலில் பெண்கள் உடுத்தும் பேண்ட்டை போன்று ஒரு பேண்ட்டை அணிந்துள்ளார் ஹரீஷ் கல்யாண். இதனை பார்த்த நெட்டிசன்கள், பட்டியாலா பேண்ட் என்றும், என்ன புரோ கேர்ள்ஸ் டிரெஸ் டிரெஸ்லாம் போடுகிறீர்கள் என்றும் கேட்டு கிண்டலடித்துள்ளனர்.

விடுவோமா?

விடுவோமா?

சில நெட்டிசன்கள் என்ன சார் தங்கச்சியோட பேண்ட்டா என்றும் பங்கம் செய்திருக்கின்றனர். மேலும் சிலர், சாதரணமாகவே நாங்கள் வச்சு செய்வோம், இப்படி வாண்ட்டடாக வண்டியில் வந்து உட்கார்ந்தால் விடுவோமா என்று கேட்டும் விளையாடியுள்ளனர்.

இப்படி இறங்கி விட்டீற்கள்..

இப்படி இறங்கி விட்டீற்கள்..

சில ரசிகர்கள் புரோ உண்மையிலேயே இந்த டிரெஸ் நல்லா இல்லை என்றும், ட்ரென்ட் ட்ரென்ட் என்று இப்படி இறங்கி விட்டீர்களே என்றும் கேட்டு வருகின்றனர். இருப்பினும் ஹேன்ட்ஸம் ஹீரோவான ஹரீஷ் கல்யாணின் இந்த போட்டோ ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X