எனக்கென்னமோ... அவரு நடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்கு... அபிஷேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் அபிஷேக் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் யூட்யூபரான அபிஷேக் தாமரையின் கதையை கேட்டு அவருக்கு ஆதரவாக பேசுகின்றார்.

நீ ஜெயிச்சே ஆகணும் என்றும் தாமரைக்கு அறிவுரை கூறுகிறார் அபிஷேக். அபிஷேக்கின் பேச்சைக் கேட்ட நெட்டிசன்ஸ் அவரை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.

உன்ன சொல்லி குத்தம் இல்ல.

உன்ன சொல்லி குத்தம் இல்ல.

இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய்... உன்ன சொல்லி குத்தம் இல்ல..
அபிஷேக்... அது எப்படி எல்லா பிக்பாஸ் புரமோவுலேயும் வர நினைக்கிற? என்று விளாசி பதிவிட்டுள்ளார்.

வெளியே யாரு போவாங்க?

வெளியே யாரு போவாங்க?

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏண்ணே நாமினேஷன் லிஸ்ட்ல அபிசேக்கு பேரு வந்தா வெளியே யாரு போவாங்க? வேறு யாரு! அபிசேக்குதான்! என பதிவிட்டு அபிஷேக்கை கலாய்த்து தள்ளியுள்ளார்.

பெரிய நாட்டாமைன்னு நெனப்பு!

பெரிய நாட்டாமைன்னு நெனப்பு!

மூன்றாவது புரமோவில் அபிஷேக் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அதோ கையை ஆட்டி ஆட்டி கத்தி கத்தி பேசுற ஆள்தான் அபிசேக்கு!... பெரிய நாட்டாமைன்னு நெனப்பு! என்று கலாய்த்துள்ளார்.

அடுத்த வாரம் வெளியே இருப்பல்ல.

அடுத்த வாரம் வெளியே இருப்பல்ல.

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் அபிஷேக் பேவதை பார்த்த இந்த நெட்டிசன், பேசு பேசு.. நல்லா பேசு.. அடுத்த வாரம் வெளியே இருப்பல்ல.. என்று அவர் அடுத்த வாரம் எவிக்ட்டாகி விடுவார் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

எங்களால பாக்க முடியல..

எங்களால பாக்க முடியல..

இன்றும் பிக்பாஸ் வீட்டில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் செல்வதை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்பா சட்டு புட்டுனு இந்த ஒரு கத சொல்லட்டுமா டாஸ்க்க முடிங்கப்பா.... எங்களால பாக்க முடியல... என கதறியுள்ளார்.

எதையாவது உளரிக்கிட்டு..

எதையாவது உளரிக்கிட்டு..

இன்றைய மூன்றாவது புரமோவில் அபிஷேக் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இவன் வேற லொட லொடன்னு எதையாவது உளரிக்கிட்டு.. என பதிவிட்டுள்ளார்.

நடிக்கிற மாதிரியே ஒரு பீலிங்கு

நடிக்கிற மாதிரியே ஒரு பீலிங்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அபிஷேக் தாமரைக்கு ஆதரவாக பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கென்னமோ இவன் நடிக்கிற மாதிரியே ஒரு பீலிங்கு... உங்களுக்கு?? என அபிஷேக்கை வச்சு செய்துள்ளார்.

யார் நல்லா அழுகிறார்களோ

யார் நல்லா அழுகிறார்களோ

புரமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா இது எப்ப பாரு ஒருத்தன் அழுதுட்டே இருக்கான்..யார் நல்லா அழுகிறார்களோ.. அவர்களுக்கு கப் கொடுங்க என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X