என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. எங்க மனோ செல்லத்தை.. வைரலாகும் மிரட்டல் போட்டோ !
சென்னை: நடிகர் மனோபாலா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் மனோ பாலா இயக்குநர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என பல முகங்களை கொண்டுள்ளார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோ பாலா இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மனோ பாலா. நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார் மனோ பாலா.
கிண்டலடிக்கும்
பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக நடிக்கும் மனோ பாலா, தனது உடல் வாகால் பெரும் கிண்டலுக்கு ஆளாவார். படங்களிலும் கூட, சந்தானம், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்கள் மனோபாலாவை கிண்டலடிக்கும் வகையில் டயலாக்குகளை பேசியிருக்கின்றனர். ஆனால் எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் வகையிலேயே நடித்து வருகிறார் மனோபாலா.
டிவிட்டரில் ஆக்ட்டிவ்
தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ளார் நடிகர் மனோ பாலா. சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக உள்ள மனோ பாலா, அவ்வப்போது கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்ப்பதும் கிண்டல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

தம்ப்ள்ஸ் எடுத்து..
இந்நிலையில் நடிகர் மனோ பாலா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் மிரட்டல் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனோ பாலாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்திருக்கின்றனர். அதாவது நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தான் ஜிம்மில் தம்ப்ள்ஸ் எடுக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
காமெடி
அந்த போட்டோவை பார்க்க பயங்கரமாகவும் உள்ளது. அதே சமயம் காமெடியாகவும் இருக்கிறது. மனோ பாலாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் சரியான சான்ஸ் என்பதை போல அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். சார் பார்த்து கை சுளிக்கி கொள்ள போகிறது என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
வந்து நின்னா தர்பார்
மனோ பாலாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன், அவரை ஓமக்குச்சி நரசிம்மன் படத்துடன் ஒப்பிட்ட நான்தாண்டா இனிமேலு.. வந்து நின்னா தர்பார் என்று கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். ஒரு சூறாவளி கிளம்பியதே, சிவ தாண்டவம் தொடங்கியதே... என இந்த பாடலை பாடியிக்கிறார் இந்த நெட்டிசன்.
ரெண்டுல எது தம்புல்சு!
ஏன் சார் ஹார்டுவொர்க்லாம் பண்றீங்க? அந்த தம்ப்ள்ஸ் உங்கள தூக்குனா நியாயம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். மனோபாலா தம்ப்ள்ஸ் தூக்கும் இந்த போஸ்டரை இவர், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என மீம்ஸ் வெளியிட்டுள்ளார். ரெண்டுல எது தம்புல்சு!!!! என கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்


Click it and Unblock the Notifications











